யாழ் பொம்மைவெளியில் ‘ஹெரோயின்’ பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 1 இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று (21.05.2026) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. […]

போதைப்பொருள் கடத்த முயன்ற 322 பேர் கைது

புனித பூமியான சிவனொளிபாத மலைக்கு (Sri Pada) யாத்திரிகர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்ல முயன்ற 322 பேரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நடப்பு வருடத்திற்கான சிவனொளிபாத மலை யாத்திரைக் காலம் ஆரம்பமானது முதல் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்கிய எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இந்தத் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக ஹட்டன் […]

புதுக்குடியிருப்பில் இளைஞன் தூக்கத்தில் உயிரிழப்பு!

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த விஜயகுமார் டல்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி இரவு ஆட்டிறைச்சிக் கறியுடன் உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச் சென்ற குறித்த இளைஞன், மறுநாள் காலையில் தாயார் எழுப்பிய போது உடல் விறைத்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். […]

பலாக்காய் பறிக்க முயன்றவர் கிணற்றில் விழுந்து பலி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சீக் (Brownswall) தோட்டத்தின் ராணி பிரிவில், பலாக்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர், கால் வழுக்கிக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய முதியவர், பிற்பகல் 3.00 மணியளவில் தனது விவசாயத் தோட்டத்திலுள்ள பலா மரத்தில் பலாக்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாக அவர் மரத்திலிருந்து தவறி, மரத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.” […]

“மீண்டும் தந்தையானார் சீமான்!” – சீமான் – கயல்விழி தம்பதிக்குக் பெண் குழந்தை பிறந்தது!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு இன்று இரண்டாவது குழந்தையாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், தமிழகச் சட்டமன்ற மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு மிகக் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஜெகதீஸ்வரன் என்ற 7 வயதில் ஒரு ஆண் மகன் உள்ளான். இந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த […]

நாவாந்துறையில் 19 வயது குடும்பப் பெண் தற்கொலை; சீதனக் கொடுமை?

சீதனக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (20) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்சி (வயது 19) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: உயிரிழந்த பெண், இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்த நபரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். எனினும், அந்தப் பெண்ணைக் கணவனின் தாயார் மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, 25 பவுண் தங்க நகையையும், ஒரு […]

உலகளாவிய உணவு விலை நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சிவப்பு எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலகளாவிய வேளாண்-உணவு அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இது அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் உலகளவில் கடுமையான உணவு விலை நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது. இத்தகைய பேரழிவுச் சூழ்நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வேகமாக குறைந்து வருகிறது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. ஹோர்முஸ் நீரிணை, […]

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும்

பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி? 27ஆம் திகதியை எதிர்நோக்கும் அரசாங்கம்! சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வதில் இந்த 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதன் […]

அமைச்சின் செயலாளருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. எஸ். சத்தியானந்த என்பவரின் சேவை தமக்குத் தேவையில்லை எனக் கூறி, அவரை அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதன் மூலம், குறித்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அந்த அதிகாரியின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குறித்த மேலதிக செயலாளர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்ததன் பின்னர், […]

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கே ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய நுகர்வோருக்காக 15 பில்லியன் ரூபா […]