பாலியல் வன்புணர்வு: பிரிட்டிஷ் கொலம்பிய மசாஜ் சிகிச்சையாளருக்கு வாழ்நாள் தடை விதித்து ஒழுக்காற்று சபை உத்தரவு

சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளி ஒருவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட லோவர் மெய்ன்லேண்ட் (Lower Mainland) பகுதியைச் சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் (Massage therapist) ஒருவரின் தொழில்முறைப் பதிவை ‘பிரிட்டிஷ் கொலம்பியா நிரப்பு சுகாதார நிபுணர்கள் கல்லூரி’ (CCHPBC) ரத்து செய்துள்ளதுடன், அவர் மீண்டும் விண்ணப்பிப்பதற்கும் 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மசாஜ் சிகிச்சையின் போது, ராஜா இராமசாமி (Raja Ramaswamy) என்ற மசாஜ் […]

இணையவழியூடாகச் சிறுவர்களைக் கவர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்: 72 வயது முதியவர் கைது; பாதிக்கப்பட்ட ஏனைய சிறுவர்களைத் தேடும் மொன்றியால் பொலிஸார்

இணையவழியூடாகச் சிறுவர்களைக் கவர்ந்து (Online luring) அவர்களுக்கு எதிராகப் பாலியல் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் மொன்றியால் நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மேலதிக சிறுவர்களைப் புலனாய்வாளர்கள் தேடி வருகின்றனர். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாசப் பொருட்களைக் கையாண்டமை (Child sexual abuse and exploitation material) ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில், 72 வயதுடைய டேனியல் ரோச்ஃபோர்ட் (Daniel Rochefort) என்ற முதியவர் கடந்த 2026 மே 7 […]

மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு: நபரொருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலதிகமாக பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மொன்றியால் பொலிஸார்

மொன்றியால் நகரைச் சேர்ந்த நபரொருவர் மீது தொடர்ச்சியான பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மேலதிக நபர்களைத் தேடி வருவதாக மொன்றியால் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில், பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட நான்கு வெவ்வேறு பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்பில் 29 வயதுடைய ஜோன்-பிலிப் உப்தா (Jean-Philippe Oubda) என்ற நபர் கடந்த […]

முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்துவிட்டதா படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் குறித்து யாரும் ஏன் பேசவில்லை? – இந்திரானந்த டி சில்வா

zத்தத்தின் இறுதிக்காலம் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களை தேசிய வீரர்களாக மாற்றுவதற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டது. இன்றும் இந்த யுத்தத்தினால் படுகொலை செய்யப்பட்ட வடக்கின் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளரும், முற்போக்கு சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இந்திரானந்த டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்துவிட்டதா என்ற தலைப்பில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கருத்தரங்கு நேற்று கொழும்பில் செடெக் நிறுவன […]

சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது

சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண் ஒருவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய சீன நாட்டு வர்த்தகப் பெண் எனக் கண்டறியப்பட்டுள்ளார். இவர் விமான நிலைய வருகை முனையத்திலுள்ள, எதனையும் அறிவிப்பதற்கில்லாத “பச்சை வழித்தடத்தின்” (Green Channel) ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே […]

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகத்தால் சதுரங்கச் சுற்றுப்போட்டி

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகத்தால் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்தத்தை முன்னிட்டு நடத்தப்படும் சதுரங்கச் சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த போட்டிக்கான விண்ணப்பத்தினை https://forms.gle/jd5qS1MUWKM8WEDh9 என்ற இணைய முகவரியின் ஊடாக மேற்கொள்ள முடியும். எதிர்வரும் ஜுலை மாதம், 07ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இடம் : சிவகாமி மஹால் ஆடியபாதம் வீதி, திருநெல்வேலிச்சந்தி, திருநெல்வேலி போட்டிக் கட்டணம் : ரூபா 600 போட்டிக் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விபரம் வங்கி கணக்கிலக்கம் : 95388142 வங்கி […]

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாமீது முறைப்பாடு

மக்கள் விடுதலை முன்னணியின் (jvp) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி புதிய மக்கள் முன்னணி (நவ ஜனதா பெரமுன) நிலக்கரி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தங்கல்லையில் நடைபெற்ற மே தின பேரணியில் அவர் ஆற்றிய உரை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த உரையின் மூலம் டில்வின் சில்வா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கும் அதன் உறுப்பினர்களான நீதியரசர்களுக்கும் […]

தேசிய விசேட நடவடிக்கை: இதுவரை 176,000க்கும் அதிகமானோர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 176,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 176,269 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 1941 கிலோ 248 கிராம் ஹெரோயின், 2003 கிலோ 512 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 436 கிலோ 235 கிராம் குஷ் போதைப்பொருள் உள்ளிட்ட […]