மட்டக்களப்பில் சிறைக் கைதி தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர், வியாழக்கிழமை (14) தப்பி ஓடியுள்ளார். மொறக்கொட்டாஞ்சேனை, தேவபுரம் காளி கோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய பத்மராஜா தினேஷ் என்ற சிறைக்கைதியே இவ்வாறு தப்பியவராவார். நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை (14) காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரை சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள கட்டுமான பணியொன்றில் மேசன் (Masan) வேலையில் ஈடுபடுத்தியிருந்தனர். […]

சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (2026.05.15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இதுவரையில் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.கவின் 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அ.தி.மு.கவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, அவர்களுக்கு பதிலாக 17 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அ.தி.மு.க, பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய் கொண்டு வந்த, த.வெ.க ஆட்சி மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரித்து சி.வி.சண்முகம் தரப்பு […]

மீனவர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை

நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக, கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படக்கூடும் என்பதால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவர்களும் உயிராபத்து காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வானிலை அவதானிப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் […]

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிடுகையில், அண்மைக் காலங்களில் இலங்கை பெரும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்திய இரண்டு பாரிய அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அவற்றில் முதலாவது “டித்வா” புயல் என்றும், இது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு […]

19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 […]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மரணத்துக்கு ஜனாதிபதி அநுர நடவடிக்கையெடுப்பார் – சகோதரர்

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் அந்தப் பத்திரிகையின் இணை நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். லசந்தவுக்காக நாம் அமைப்பின் சார்பில் கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், லசந்த படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகளாகியும், இதுவரை மக்களுக்குத் தெரியக்கூடிய வகையில் […]

யாராக இருந்தாலும் தவறு செய்பவர்களை துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், யாராவது தவறு செய்திருந்தால், அவர்களின் தராதரத்தைப் பார்க்காமல் அவர்களை துறவறத்திலிருந்து நீக்க வேண்டும். சாசனச் சீர்திருத்தங்களுக்காக ஒரு தர்ம மாநாடு அவசியமாகும். அதேநேரம் மகா நாயக்க தேரர்கள், சங்க நீதிமன்றத்துக்கு அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு விரைவாகச் செயற்பட […]