படகு கவிழ்ந்து இளைஞன் பலி

கெக்கிராவ, கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஆவார். உயிரிழந்த நபர் மேலும் ஐந்து பேருடன் கிரிமெட்டியாவ குளத்தில் படகு ஓட்டிச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் உதவியுடன் பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான கண்காட்சி!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிக் கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில், பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான புவியியல் அமைவிடம்சார் செயற்கை நுண்ணறிவு (GeoAI) தொடர்பான கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கினை, பேரனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்களுக்கான சங்கத்துடன் (ADRiMP) இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நடத்தவிருக்கிறது. மே மாதம் 14 ஆம் திகதி இக்கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும். மேம்பட்ட வரைபடக் கருவிகளும், அமெரிக்கா தலைமையிலான செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கங்களும் பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையையும், அவற்றிற்கான பதிலளிப்பையும் ​எவ்வாறு பலப்படுத்த […]

உயிரிழந்துள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியக் கடதாசி!

தற்போது உயிரிழந்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியில் பல உண்மைகள் இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கையின் நிலவும் சட்ட முறைமைக்கு அமைய, பொலிஸார் அல்லது விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் அளிக்கப்படும் வெறும் வாக்குமூலங்களுக்கு மிகக் குறைந்த அளவிலான சட்ட […]

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11) ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி – தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றது. இதனை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது கஞ்சிகூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது. பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அந்த முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதன் போது பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட பிணைமுறி நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அண்மையில் அளவீட்டுப் பணி இடம்பெறவிருந்தது. காணிகளின் உரிமையாளர்கள் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு […]

தனியார் துறையை உர விநியோகத்திற்கு பயன்படுத்தத் தீர்மானம்

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த வாரத்திற்குள் உரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும், விவசாயிகள் உணர்வுப்பூர்வமானவர்கள் என்பதால் நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பொய்யான மாயையை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் தற்போது போதுமான அளவு உரம் இருப்பதாகவும், பெரும் போகத்திற்குத் தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து […]

தற்போது நிலவும் சீரற்ற வானிலையில் மாற்றம் ஏற்படுமா?

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், அதிக நீர்மட்டம் கொண்ட நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் லசந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த நீர்த்தேக்கங்களில் 65% நீர் நிரம்பியுள்ளதாகவும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 12 நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், வெஹெரகல நீர்த்தேக்கம் வான்பாய்வதால் கதிர்காமம் பகுதிக்கு ஓரளவுக்கு […]

திருமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அந்த அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, […]

பதவியேற்காமல் மாயமான சி.வி.சண்முகம்! அதிமுகவில் திடீர் சலசலப்பு; பிளவுபடுகிறதா எடப்பாடி அணி?

சென்னை: தமிழகத்தின் 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு நடைபெற்று வரும் நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர் சி.வி.சண்முகத்தின் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை செயலாளர் சீனிவாசன், சி.வி.சண்முகத்தின் பெயரைப் பதவியேற்க அழைத்தபோது, அவர் அவையில் இல்லாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாகச் சட்டசபைக்குத் தனியாளாக வந்த சி.வி.சண்முகம், பதவியேற்காமலேயே அவையை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனித்தனி குழுக்களாகச் […]

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகாது! புதிய 200 யூனிட் திட்டம் குறித்து தமிழக அரசு அதிரடி விளக்கம்!

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு அறிவித்த “200 யூனிட் இலவச மின்சாரம்” திட்டம் குறித்து நிலவி வந்த குழப்பங்களுக்குத் தமிழக மின்சாரத் துறை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் துறை செயலர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு […]