தலைமன்னார் பிரதான வீதியில் வாகன விபத்து

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை மினி வான் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைக்காக […]
முதலமைச்சர் விஜயிடம் தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு’ நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்கு மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்வில் நிறைவேற்றுமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளர். தமிழ்த் தேசியப் பேரவை தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) தமிழ் நாடு முதலமைச்சர் சந்திரசேகர் […]
தீ விபத்து: யாழ்.போதனா வைத்தியசாலையில் 60 சதவீதமான மருந்துகள் எரிந்தன!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ச.சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் நேற்றைய தினம்(09.05.2026) தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில் பலத்த போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து […]
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம்; மூவர் கைது
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கடத்தி தாக்கப்பட்டமை தொடர்பில் 3 முச்சக்கரவண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(9.5.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வயல் நிலப் பகுதியில் மூன்று மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தின் போது […]
முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு அறிக்கை

முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத் தமிழர்களாகிய நாம் தோற்றுவிட்டோம் என எம்மிற் சிலர் கருதினாலும் சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசு இன்று வரை அவ்வாறு நம்பவில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுதாவது, தமிழ் மக்களாகிய நாம் எதிர்கொண்டு வருகின்ற தமிழ் இன அழிப்பை உணர முடியாதவர்களாக மாறி தம்மீதான தமிழ் இன அழிப்பு வரலாற்றையும் அதை நிகழ்த்தி வருபவர்கள் யாரென்பதையும் மறந்து, எங்களது பாதுகாப்பரணாக நிற்கின்ற தமிழ்த் […]
ஆளுநர் மாளிகையில் முதல்வர் விஜய்; தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம்

சற்றுமுன்னர் சென்னையின் கிண்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் நோக்கி முதலமைச்சர் விஜய் புறப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக தவெக எம்.எல்.ஏ.வான கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவியேற்பு விழா தற்போது ஆளுநர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய்,ஆளுநர், முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர். தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமை பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில், தற்போது […]
நாளை கூடுகிறது தமிழகச் சட்டசபை! பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராகும் முதல்வர் விஜய்!

சென்னை: தமிழக முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுள்ள நிலையில், நாளை (மே 11, திங்கட்கிழமை) தமிழகச் சட்டசபை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த முக்கிய கட்டத்திற்கு நகர்கிறார். நாளை கூடும் சட்டசபையில், தற்காலிக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையா முன்னிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற எம்.எல்.ஏ-க்கள் மற்றும் […]
கோட்டையில் கொடி கட்டிய விஜய்! 27 மாதங்களில் அரியணை ஏறி இந்தியாவையே வியக்கவைத்த ‘தளபதி’!

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுத் தனது பணிகளைத் தொடங்கியுள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் வரிசையில், கட்சி தொடங்கிய 27 மாதங்களிலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விஜய் புதிய சாதனை படைத்துள்ளார். சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, காவல்துறையினரின் சிறப்பான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அவர், கோட்டையில் உள்ள முதலமைச்சர் அறையில் முறைப்படி […]
“திமுக, அதிமுக இல்லாத ஆட்சி மகிழ்ச்சி அளிக்கிறது!” – முதல்வர் விஜய்க்கு சீமான் வாழ்த்து!

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் மற்றும் அவரது அமைச்சரவைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. சீமான் தனது பதிவில், “தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தம்பி விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு […]
முதல்வரின் முதன்மைச் செயலாளராக செந்தில் குமார் ஐஏஎஸ் நியமனம்! கோட்டையில் பணிகளைத் தொடங்கினார் விஜய்!

சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது நிர்வாகக் குழுவின் முதல் முக்கிய நியமனங்களை அதிரடியாக மேற்கொண்டுள்ளார். முதல்வரின் முதன்மைச் செயலாளராக (தனிச் செயலாளர் 1) பி. செந்தில் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தனிச் செயலாளர் 2-வாக ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத் துறை செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட செந்தில் குமார், தற்போது உமாநாத் ஐஏஎஸ் வகித்து வந்த முதன்மைச் செயலாளர் பொறுப்பை ஏற்கிறார். ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக இருந்த […]