போதைப்பொருள் கடத்தல் பிக்குகள்: தலைமைப் பிக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு – பொலிஸார்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் ஒரு தொழிலதிபர் சூத்திரதாரியாகச் செயற்பட்டுள்ளமையை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்ததாகக் கருதப்படும் தலைமை பிக்கு கம்பஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தின் பின்னணி: கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த இந்த சந்தேகநபர்கள், சுமார் 112 கிலோகிராம் குஷ் கஞ்சா […]

முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்பூர்வமான முதன்மைப் பதிவு இல்லாத வாகனமொன்றுக்கு இலக்கத் தகடுகளை விநியோகித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டின் கீழ், நேற்று குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பத்தரமுல்லை சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றி வரும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை […]

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பேணுதல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எந்தவொரு […]

உலக அமைதிக்கான நடைபயணம் நிறைவு

லக அமைதியை நோக்கமாகக் கொண்ட ‘ஏஹிபஸ்ஸிகோ’ அமைதி நடைபயணம் நேற்று(28) பிற்பகல் நிறைவடைந்தது. கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற அரச விழாவில், ஜய ஸ்ரீ மகா போதியின் போதி மரக்கன்றினை வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கையளித்ததைத் தொடர்ந்து இந்நிகழ்வு நிறைவுக்கு வந்தது. உலக அமைதி குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த அமைதி நடைபயணம், ஏப்ரல் 22ஆம் திகதி தம்புள்ளை ரஜமகா […]

போதைப்பொருட்களுடன் கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் “குஷ்” மற்றும் ஹேஷ்” ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையில் தெரியவந்துள்ளது. தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நாடு திரும்பிய போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர்கள், நேற்று சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களில் 19 […]

கொழும்பு மெகசின் சிறைச்சாலை மரணம்: மேலும் இரு சிறைக்காவலர்கள் கைது

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் இன்று (28) மாலை கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றம் தொடர்பாக இதுவரையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொரளை பொலிஸார், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் […]

சுன்னாகத்தில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தொடர் தாக்குதல்; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது

கடலில் வைத்து ஒரு கடற்றொழிலாளரை பிடித்துக் கொண்டு போய் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் குறித்த இலங்கை கடற்றொழிலாளரை கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற,காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ளது. இந்தநிலையில் குறித்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு சிவில் சமூகம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் […]

விமான நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளால், ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரபல குறைந்த கட்டண விமான நிறுவனமான ரயான் ஏர் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஓ’லியரி இது குறித்து கவலை வெளியிட்டுள்ளார். “கடந்த மார்ச் மாதம் ஒரு பேரல் விமான எரிபொருள் (Jet A-1) 80 டொலராக இருந்தது. ஆனால், தற்போது அது 150 […]