ஹாமில்டன் வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

கடந்த வெள்ளிக்கிழமை ‘ஜாக்சன் ஸ்கொயர்’ (Jackson Square) வணிக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன் நபில் அஸ்காஃப் (Nabil Askafe), கண்ணீருடன் இன்று வழி அனுப்பி வைக்கப்பட்டார். திங்கட்கிழமை ஹாமில்டன் மவுண்டன் மஸ்ஜித்தில் (Hamilton Mountain Masjid) நடைபெற்ற ஜனாஸா (இஸ்லாமிய இறுதிச் சடங்கு) தொழுகையில் திரளானோர் கலந்துகொண்டனர். “நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இது ஏதோ கனவு போல இருக்கிறது,” என்று நபிலின் நண்பர் ஒருவர் […]

ஆழியவளையில் மணலுக்குள் மர்மப் பொருள்?

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இனந்தெரியாத மர்ம பொருளொன்று கண்டறியப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழியவளை கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதியில், மணலுக்குள் ஓரளவு புதைந்த நிலையில் இந்த மர்ம பொருள் காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள், உடனடியாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ள பாதுகாப்பு தரப்பினர், முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்டனர். எனினும், கண்டெடுக்கப்பட்ட பொருள் வெடிக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். குறித்த பொருள் […]

வடமராட்சி கிழக்கு காணி அபகரிப்பு : பிரதேச செயலாளர் நடவடிக்கை

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் அரச காணியை அபகரித்து முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு மாத கால அவகாசத்திற்குள் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. புலம்பெயர் தேசம் ஒன்றில் வசிக்கும் நபர் ஒருவர், குடத்தனை பகுதியிலுள்ள அரச காணியை தனது சொந்தக் காணி என உரிமை கோரி, எல்லை மதில் அமைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவதானித்த […]

பிக்குகளை போதைப்பொருள் கடத்தலுக்கு வழிநடத்திய பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் நேற்று(27) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த என்ற இந்தச் சந்தேக நபர், தாய்லாந்திலிருந்து […]

இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(28) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓய்வூதியர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்கள்: 2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படவில்லை. 2025 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்குப் […]

சுறா மீன்களுடன் நால்வர் கைது

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு வருகை தந்த உள்ளூர் இழுவை மடி மீன்பிடி படகொன்றைப் பரிசோதித்தபோது, சுமார் 7 கிலோவிற்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களை (Alopias Vulpinus) வைத்திருந்த நான்கு (04) மீனவர்கள் கடலோர பாதுகாப்புப் படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கி இருவர் பலி

கலாவெவ மற்றும் விஜிதபுர சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (27) மாலை பெய்த மழையுடன் கூடிய கடும் மின்னல் தாக்கத்தினால், விவசாய நிலங்களில் பணியில் ஈடுபட்டிருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விஜிதபுர, கணக்கன்மடுவ பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஜெமால்தீன் பதூர்தீன் மற்றும் விஜிதபுர, புளியங்குளம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய தென்னகோன் முதியன்சேலாகே ஜக்சன் சேனாரத்ன தென்னகோன் ஆகிய இருவரே இவ்வாறு உயி​ரிழந்துள்ளார். உயிரிழந்த இருவரும் கணக்கன்மடுவ மற்றும் புளியங்குளம் பகுதிகளில் அமைந்துள்ள […]

17 வயது மாணவியைக் காணவில்லை

மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுராவை, தஹம்கம வீதியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். 12ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஜே. எம். ஹசினி மதுவந்தி (17 வயது) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சம்பவம் குறித்து மாணவியின் தந்தையான ஜே. எம். ஜயவர்தன, மெதகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 21ஆம் திகதி மாலை 6.00 மணியளவில், உடல்நலக்குறைவு காரணமாக […]