வடமராட்சி கிழக்கு காணி அபகரிப்பு : பிரதேச செயலாளர் நடவடிக்கை

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் அரச காணியை அபகரித்து முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு மாத கால அவகாசத்திற்குள் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசம் ஒன்றில் வசிக்கும் நபர் ஒருவர், குடத்தனை பகுதியிலுள்ள அரச காணியை தனது சொந்தக் காணி என உரிமை கோரி, எல்லை மதில் அமைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவதானித்த ஊர் மக்கள் மற்றும் பொது அமைப்புகள், அரச காணிகளை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

இதனை தொடர்ந்து, பருத்தித்துறை பிரதேச சபையினால் குறித்த கட்டிடத்திற்கு எதிராக ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) கடிதம் ஒட்டப்பட்டது. இருப்பினும், போலி காணி உரிமையாளர் அந்த அறிவித்தலை கிழித்தெறிந்து சர்ச்சையை அதிகப்படுத்தினார். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்து, மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

தற்போது நிலவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம், 1979ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க அரசு காணிகள் (ஆட்சி மீளப் பெறுதல்) சட்டத்தின் கீழ் நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

குறித்த காணியில் ஒட்டப்பட்டுள்ள வெளியேற்றும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

சட்டவிரோத ஆக்கிரமிப்பு: மோகனதீஸ்வரன் நிஷா என்பவர் அரச காணியில் அதிகாரமில்லாமல் தங்கியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வெளியேற்றக் காலக்கெடு: எதிர்வரும் 2026.05.29ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக குறித்த காணியிலிருந்து அவரும், அவரைச் சார்ந்தோரும் முழுமையாக வெளியேற வேண்டும்.
காணி ஒப்படைப்பு: குறித்த காணியை எவ்வித ஆக்கிரமிப்புமின்றி காலியான நிலையில், தகுதி வாய்ந்த அதிகாரியான பிரதேச செயலாளரிடமோ அல்லது பின்வரும் அதிகாரிகளிடமோ ஒப்படைக்க வேண்டும்:
செபமாலை தோமஸ்யூட் (கிராம சேவையாளர்)
தர்சிகா நிரோஜன் (குடியேற்ற உத்தியோகத்தர்)
அரசு காணிகள் தனிநபர்களால் அபகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் பிரதேச செயலகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை குடத்தனை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

jud

திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

April 29, 2026

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம்

anur

ஜனாதிபதி மற்றும் மகா சங்கத்தினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

April 29, 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள

gam

கம்பளையில் பயங்கர மண்சரிவு

April 29, 2026

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

eft

வெள்ளை மாளிகைக்கு முன்பாக எப்ஸ்டீன் விவகாரத்தை வெளிச்சம் போட்ட திரை வாகனம்

April 29, 2026

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முன்பாக நேற்று ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய

HHDrDs7aoAA-rnx

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு தாயகத்தில் அஞ்சலி

April 29, 2026

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி 28.04.2026 அன்று மறைந்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா

shammy sil

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ்: ஷம்மி சில்வா தலைமையிலான குழு இராஜினாமா

April 29, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கிய இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்

US-EMbassy-1

வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்காஉறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு.

April 29, 2026

div]:bg-bg-000/50 [&_pre>div]:border-0.5 [&_pre>div]:border-border-400 [&_.ignore-pre-bg>div]:bg-transparent [&_.standard-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.standard-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8 [&_.progressive-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.progressive-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8″> _*]:min-w-0 gap-3 standard-markdown”> அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும்

chandrasekar

.யாழ்ப்பாண மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்

April 29, 2026

யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டு, இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும்

archuna gun

அர்ச்சுனா பிணையில் விடுதலை

April 29, 2026

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பெரியவிளான்

Electricity Tariff-710053

மின்சாரக் கட்டணத் திருத்தம்: மே 9 ஆம் தேதி இறுதி முடிவு

April 29, 2026

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு மே மாதம் 9 ஆம் தேதி

Nalinda Jayatissa Cabinet Meet-790605

$2.5 மில்லியன் திறைசேரி திருட்டு: அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை

April 29, 2026

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 2.5 மில்லியன் டாலர் நிதி திருட்டு மற்றும் அது குறித்த விசாரணைகள் பற்றி

(c)PragMatrix

புதுச்சேரி மதுபானத்தை தமிழகத்திற்குள் கொண்டு வரலாமா? – சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அவசர முறையீடு!

April 29, 2026

சென்னை: புதுச்சேரியில் இருந்து தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சமூக