லில்லி மற்றும் ஜாக் சல்லிவன் காணாமல் போய் ஓராண்டு நிறைவடையும் நிலையில் தொடரும் தேடுதல் வேட்டை

நோவா ஸ்கோடியா (Nova Scotia) மாகாணத்தின் வடகிழக்கு கிராமப்புறத்தில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஆறு வயது லில்லி சல்லிவன் மற்றும் நான்கு வயது ஜாக் சல்லிவன் ஆகிய உடன்பிறப்புகளைத் தேடும் பணி, அவர்கள் காணாமல் போய் ஓராண்டு நிறைவடையும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் லான்ஸ்டவுன் ஸ்டேஷன் (Lansdowne Station) காடுகளில் தொடர்ந்தது. சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் காடுகளில் லில்லி மற்றும் ஜாக் குறித்த ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்று தீவிரமாகத் தேடினர். […]

நிதி அமைச்சின் முக்கிய ஆவணங்களைக் காணவில்லை!

நிதி அமைச்சின் கணினி அமைப்பிலிருந்து பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடைய கடன் மீளச் செலுத்தல் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திருடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஹேக்கர்களே (Hackers) இதிலும் தொடர்புபட்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். வார இறுதி ஆங்கில பத்திரிகையொன்று இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. காணாமல் போன இந்த ஆவணங்கள் பிரான்ஸுக்கான கடன் தவணையைச் செலுத்துவது தொடர்பானவை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

யாழில் போதைப்பொருட்களுடன் 13 பேர் கைது

யாழ்.நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது கைது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஹெரோயின், போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(no-name)

வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இழுத்தடிக்கப்படுகின்றது – தவிசாளர் யுகதீஸ் விசனம் வடமராட்சி கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு மேலும் அவர் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இதுவரை இல்லாததால் மக்கள் […]

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தமிழ்க்கட்சிப்பிரதிநிதிகள் சந்திப்பு

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை வடக்கு மற்றும் தெற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுப்பது குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற தந்தை செல்வா நினைவுப்பேருரை நிகழ்வில் உரையாற்றுவதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் […]