‘சமாதானத்திற்கான நடைபயணத்தில்’ பங்கேற்று வரும் ‘ஆலோகா’வுக்கு சுகயீனம்

‘சமாதானத்திற்கான நடைபயணத்தில்’ (Walk for Peace) பங்கேற்று வரும் ‘ஆலோகா’ (Aloka) எனும் நாய், அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் சிக்கி புதன்கிழமை (22) அன்று சுகயீனமடைந்துள்ளது. இதனையடுத்து, அந்த விலங்கிற்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. கே. டி. லால்காந்த பங்கேற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்: “ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் இந்த நாய் மற்றும் நடைபயணத்தில் பங்கேற்கும் பிக்குகளுடன் , புகைப்படங்கள் […]
தில்லையடி கடற்கரைப் பகுதியில் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றல்

கற்பிட்டி, தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ‘இலங்கை கடற்படை கப்பல் விஜய’ (SLNS Vijaya) குழுவினர், தில்லையடி கடற்கரை பகுதியில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 26 மூட்டைகளை பரிசோதித்தபோது, அவற்றில் சுமார் 1,038 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். கடற்படையினரால் […]
அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் போதைப்பொருள்!

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த அரச புலனாய்வுப் பிரிவைச் (State Intelligence Service) சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீகஹவத்த, கல்வெல்ல பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குருந்துவத்தை அரச புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 98 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை […]
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கட்டிட நிர்மாணப் பணி?

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் சர்ச்சைக்குரிய காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கட்டிட நிர்மாணப் பணிகள் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடத்தனை பகுதியில் அமைந்துள்ள குறித்த காணியானது தனக்கு சொந்தமானது என கூறி நபர் ஒருவர், எவ்வித சட்டபூர்வ ஆவணங்களும் இன்றி அங்கு கட்டிடம் ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக கருதப்படும் இக்காணியில், அத்துமீறி கட்டிடம் கட்டப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இது […]
ஹோர்மூஸ் நீரிணை நீரில் நிலக்கண்ணி வெடிகளை பதிக்கும் எந்தப் படகாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்த ட்ரம்ப் உத்தரவு

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் நீரில் நிலக்கண்ணி வெடிகளை பதிக்கும் எந்த படகாக இருந்தாலும் சிறிய படகுகளாக கூட இருந்தாலும் தயக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், எங்கள் “mine sweepers” தற்போது அந்த நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளவும், அதையும் மூன்று மடங்கு அதிகரிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.