ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த அரச புலனாய்வுப் பிரிவைச் (State Intelligence Service) சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீகஹவத்த, கல்வெல்ல பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குருந்துவத்தை அரச புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 98 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.