கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இது அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதேவேளை வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், […]
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து கொண்டிருக்கின்றது. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை நினைவு கூருவதுடன், இன்றும் பதில்களுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுடன் துணை நிற்கின்றதுஎனத்தெரிவித்துள்ளஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) தனது அறிக்கையில், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை […]
உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரூ ஜோஸ்வோலெஸ் (Monsignor Andrez Jozwowlez) இன்று தெரிவித்தார். கொழும்பு புனித அந்தோணியார் திருத்தலத்தில் இன்று நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்: “இந்த நினைவேந்தல் நிகழ்வானது பழிவாங்கும் உணர்வுடன் (Vengeance) இருக்கக் […]
“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “விஜயகாந்த் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான். தற்போது அந்தத் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இருந்தாலும், அவர் உண்மையில் நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்; அதில் சந்தேகமே வேண்டாம். திமுகவின் தோல்விகளும் துரோகங்களும் உலக வரைபடத்தை விட நீளமானவை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் […]
நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு நில்வலா கங்கையை மையப்படுத்தி விசேட திட்டமாக உப்புநீர்த் தடுப்பு அணை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இந்த உப்புநீர்த் தடுப்பு அணை காரணமாக 2019ஆம் ஆண்டின் பின்னர் ஒவ்வொரு வருடமும் நெற்பயிர்ச் செய்கைக்கு பாதிப்புகள் ஏற்பட்டமை பதிவாகியுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, கம்புருபிட்டிய, கெகுணதுர, மடிஹே, மாலிம்பட, மெத உயங்கொட, கலல்ல, வில்பிட்டிய மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள […]
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக ஜப்பானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வலுவான தீவிரத்தன்மையுடன் பதிவாகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று […]
பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, பிரேமலால் ஜயசேகர தனது துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது, குறித்த துப்பாக்கியின் உரிமம் காலாவதியாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது அரசியல் எதிரிகளையும், கட்சியின் எதிர்காலத் திட்டங்களையும் மிகத் தெளிவாக அவர் விளக்கியுள்ளார். அந்த அறிக்கையில் விஜய் கூறியிருப்பதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இன்று காலை நடைபெற்ற விசேட ஆராதனையில் உரையாற்றிய பேராயர், ஒருசில தரப்பினர் இந்த விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். தாக்குதல் தொடர்பாகத் தங்களது கடமைகளைச் செய்யத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை […]
சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சீமான் பேசியதாவது, “நமது ஆட்சியில் பெண்களுக்கு சரிபாதி உரிமை வழங்கப்படுகிறது. இது பெருமைக்காக அல்ல, இது நமது பிறவிக்கடமை. பெண்கள் வழங்கிய […]