வவுனியாவில் விபத்து; ஒருவர் பலி

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று(9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற உடனேயே, லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அருகில் […]
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டமைக்கு ட்ரம்ப் அதிருப்தி
ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதை ஈரான் கையாளும் விதம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இரண்டு வார காலம் போர் நிறுத்தம் அமுலாகிய நிலையில், இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களை கண்டித்த ஈரான், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எரிபொருள் கப்பல் போக்குவரத்துக்கான அனுமதி மறுத்துள்ளதுடன் அந்த கடல்பகுதியையும் மூடியுள்ளது. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி […]
நியூ கிளாஸ்கோ நகரில் தீ விபத்து: 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்கள் சாம்பல்

நோவா ஸ்கோட்டியாவின் நியூ கிளாஸ்கோ நகரின் மையப்பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மூன்று முக்கிய கட்டிடங்கள் முற்றாக அழிந்துள்ளன. இதனால் அந்த நகரின் முக்கிய வர்த்தக வீதியான ப்ரோவோஸ்ட் வீதி (Provost Street) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ப்ரோவோஸ்ட் வீதியிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்தது. அந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டமாகக் காணப்பட்டது. சேத விபரங்கள்: நகரின் அடையாளங்களாகத் திகழ்ந்த மற்றும் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த […]
கனடா நீச்சல் உலகின் ஜாம்பவான் நான்சி கரபிக் காலமானார்

கனடாவின் புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனை நான்சி கரபிக், பிரிட்டிஷ் கொலம்பியாவின் லங்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் காலமானதாக கனடா நீச்சல் சம்மேளனம் (Swimming Canada) அறிவித்துள்ளது. நோவா ஸ்கோட்டியாவின் ஹாலிஃபாக்ஸைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1975-ஆம் ஆண்டு தனது 13-வது வயதில் 200 மீட்டர் முதுகுப்புற நீச்சலில் (Backstroke) உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இளம் வயது விருது: 1975-ஆம் ஆண்டிலேயே, தனது 14-வது வயதில் கனடாவின் மிக இளம் வயது […]
நோவா ஸ்கோட்டியா கூடைப்பந்து சம்மேளனம் கடும் எச்சரிக்கை

சிறுவர் கூடைப்பந்து போட்டிகளின் போது பார்வையாளர்களின் மோசமான நடத்தை அதிகரித்து வருவது குறித்து நோவா ஸ்கோட்டியா கூடைப்பந்து சம்மேளனம் (Basketball Nova Scotia) தனது கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 29-ஆம் திகதி நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான (U14) மாகாண அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி ஆடுகளத்திற்குள்ளேயே (Courtside) பரவியது. இதனால் […]
இலங்கையின் பிரதான பொருளாதார மையங்களுக்கு காய்கறிகளின் வரவு பாரிய வீழ்ச்சி

எரிபொருள் விலையேற்றம் காரணமாக இலங்கையின் பிரதான பொருளாதார மையங்களுக்கு நாள்தோறும் வரும் காய்கறிகளின் அளவு 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. இது குறித்து தம்புள்ளை விசேட பொருளாதார மையத்தின் வர்த்தக சங்கத் தலைவர் சி.ஏ.சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், காய்கறிகளுக்கான மொத்த விற்பனை விலையும் பெருமளவு சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதே காலப்பகுதியில் கெப்பெட்டிபொல பொருளாதார மையத்திற்கு நாள் ஒன்றுக்கு 5.5 […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; அதிகாரிகள் விடயத்தை திசைதிருப்புகின்றனரா? – சாணக்கியன்

சாரா ஜெஸ்மின் விடயத்தில் மூன்றாவது தடவையாக டி.என்.ஏ பரிசோதனை செய்யவில்லை என்று அவரின் தாய் தற்போது குறிப்பிடுகிறார். மூன்று டி.என்.ஏ பரிசோதனைகள் செய்திருந்தால், அந்த டி.என்.ஏ யாருடையது? கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாரா ஜெஸ்மினின் வீட்டுக்கு சென்று அவரிடம் தாயிடம் ‘உங்களின் மகள் இறக்கும்போது இரண்டு மாத கர்ப்பிணி, அவரை இராணுவம் அடக்கம் செய்துள்ளது’ என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். ஆனால் சாரா ஜெஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார். இதனால் இந்த விடயத்தில் சில சந்தேகங்கள் […]
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு கோடீஸ்வரன் கண்டனம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பொதுமக்களை பகடைக்காயாக வைத்து தமது தேவைகளை நிறைவேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பொதுமக்களை கேடயமாக வைத்து போராடுவதை நிறுத்த வேண்டும். இன்று நோயாளர்கள் பெரும் பாதிக்கப்படுகின்றனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் மிகவும் […]