சாணக்கியன் எம்.பிக்கு சபாநாயகர் எச்சரிக்கை

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் உத்தரவுக்கு இணங்கத் தவறினால், நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு இன்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பிக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் நபர்களிடம் அமைச்சர் லஞ்சம் வாங்குவதாக சாணக்கியன் எம்.பி குற்றம் சுமத்தினார். இந்தச் சாடலை நிராகரித்த அமைச்சர், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் […]

திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brompton, யாழ். புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தராணி சிவசுப்ரமணியம் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம்(M.S. மணியம்) அவர்களின் மனைவியும், ஜான்சிராணி(ஜெர்மனி), இந்திராணி(ஜேர்மனி), பாலகிருஷ்ணன்(ஜேர்மனி), ராதா கிருஷ்ணன்(இலங்கை), ஆனந்த கிருஷ்ணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், கல்யாணி(பிரான்ஸ்), குணபாலன்(இலங்கை), ரஞ்சனி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜமுனா மற்றும் […]

சங்கக்காரவின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் முதலீட்டு மோசடி?

இலங்கைத் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார லாபகரமான முதலீட்டு வாய்ப்பு ஒன்றை பரிந்துரைப்பது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒரு மோசடி என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘Factcrescendo’ எனும் உண்மைச் சரிபார்ப்பு இணையதளம் இது குறித்து விசாரணை நடத்தியது. அதில், பரப்பப்படும் வீடியோ மற்றும் அது தொடர்பான செய்திக் கட்டுரைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட போலியானவை (Online Scam) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடக இணையதளம் ஒன்றின் வடிவமைப்பைப் போன்று […]

பல்கலைக்கழக மாணவன் கொலை: ஐந்து மாணவர்கள் கைது

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் ஒன்றில், மாணவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், பத்தரமுல்லைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்து உபசாரத்தின் போது மாணவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலின் போது, ஒரு மாணவர் கூர்மையான […]

சண்டிலிப்பாயில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு அபராதம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனையில் ஈடுபட்ட உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழக்கு விசாரணை இன்று (09.04.2026) நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், வீதியோர உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய விற்பனை நிலையங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இதற்குப்பின்பு, குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் தொடர்ந்து சுகாதார விதிமுறைகளை மீறி உணவு விற்பனையில் […]

பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையின் போது எல் நினோ நிலை ஏற்பட்டால், செப்டெம்பர் மாதம் வரை வறட்சிக் காலம் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (09) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே, தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டெம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நிலவக்கூடும். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு குடிநீர் மற்றும் அனைத்து நீர்ப்பாசன […]

லெபனானையும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்க கனடா அழுத்தம்!

ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானையும் ஒரு அங்கமாகச் சேர்க்க வேண்டும் என்றும், அந்த உள்ளடக்கத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்றும் ஒட்டாவா அழுத்தம் கொடுத்து வருவதாக லிபரல் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் CBC செய்திகளுக்குத் தெரிவித்தார். தன்னைப் பற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்த அனுமதி இல்லாததால், பெயர் குறிப்பிடாமல் பேசிய அந்த அதிகாரி, “லெபனானைச் சேர்க்க முயற்சிக்கும் பல நாடுகளில் கனடாவும் ஒன்று” என்றார். “இது அனைத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு […]

மருதனார்மடத்தில் சிறுவனைக் கடத்திச் சென்று தாக்குதல்;வீடியோ எடுத்தவர் கைது

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவருடைய 14 வயது தம்பியை இருவர் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட சிறுவனை ஒரு ரகசிய இடத்தில் வைத்து, ஆடைகளைக் களைந்து சித்திரவதை செய்துள்ளனர். சிறுவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை சிறுவனின் அண்ணன் மற்றும் சிலருக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொலிஸ் நடவடிக்கை: சிறுவனின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார், சம்பவத்தை […]

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு; சிரமத்தில் தவிக்கும் நோயாளர்கள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள 48 மணி நேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கிண்ணியா தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முன்விசாரணைகள் இன்றி, சட்டவிரோதமான முறையில் மற்றும் அரசியல் உள்நோக்கங்களுடன் வைத்தியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியே இந்த நாடளாவிய ரீதியிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (09) காலை 8:00 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தினால், கிண்ணியா தள வைத்தியசாலையின், வெளி நோயாளர் பிரிவு (OPD), […]