“சிறுவர் உழைப்பைச் சுரண்டாதே”; விழிப்புணர்வு வீதி நாடகங்கள்!

“சிறுவர் உழைப்பைச் சுரண்டாதே” எனும் தலைப்பிலான விழிப்புணர்வு வீதி நாடகங்கள், கொட்டகலை நகரம் மற்றும் கிருஸ்லஸ்பாம் தமிழ் பாடசாலை ஆகிய இடங்களில் அண்மையில் அரங்கேற்றப்பட்டன. ஹட்டன் தொழிலாளர் திணைக்களத்தின் (ACL) அனுசரணையுடன், சங்கு கலைக்கழகத்தின் தயாரிப்பு மற்றும் நெறியாள்கையில் இந்த நாடகங்கள் மிகக் கலைநயத்துடன் மேடையேற்றப்பட்டன. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை வலியுறுத்துவதே இந்த நாடகத்தின் பிரதான நோக்கமாகும். வேலைக்குச் செல்லும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்கள் குறித்தும், […]
கனடாவின் பர்றியில் இரவு விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

கனடாவின் பர்றி நகரின் மையப்பகுதியில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.சம்பவத்தின் பின்னணி:ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டன்லப் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dunlop Street East) பகுதியில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே பல நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இந்தச் […]
ஈரானில் போர்நிறுத்தம் வரவேற்கத்தக்கது: லெபனானிலும் அமைதி அவசியம்! – கார்னி

ஈரானில் தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள செய்தியை அடுத்து, புதன்கிழமை(8) செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மார்க் கார்னி, “இது ஒரு நல்ல நாள்” என்று தெரிவித்தார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்த கனடா தனது ஆதரவை வழங்கும் என்று அவர் கூறினார். அந்தப் பிராந்தியத்தில் லெபனானும் உள்ளடங்கும்; ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் சீரமைக்கும் பணிகளில் கனடா ஈடுபடும் என்றும் […]
19 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற கொலை; சந்தேகத்தில் நால்வர் கைது!
ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரை சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு ரொட்டும்ப, பனாகடுவ பகுதியில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை தெனியாய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டும்ப, பனாகடுவ பகுதியைச் சேர்ந்த 50 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களும் ஏனைய இருவரும் அவர்களது உறவினர்களும் ஆவர். உயிரிழந்த நபரும் இச்சந்தேக நபர்களின் உறவினர் எனக் கூறப்படுகிறது. […]
புதிய வைத்தியர்களுக்கான நியமனங்கள் அறிவிப்பு
பயிற்சிக்கு பின்னரான நியமனங்களுக்காக விண்ணப்பித்த 436 புதிய வைத்தியர்களுக்கான சேவை நிலையங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு நேற்று (08) அறிவித்துள்ளது. இதன்படி, நியமனம் பெற்றுள்ள வைத்தியர்கள் நேற்று(09) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த புதிய வைத்தியர்கள் நியமனங்களுக்காக விண்ணப்பித்த விதம் மற்றும் அவர்களின் தகுதிப் பட்டியல் (Merit List) என்பவற்றின் அடிப்படையில், […]
மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது ஈரான்!

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடா பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை செய்தியை அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களின் கவனத்திற்கு இந்த நீரிணை வழியாகப் பயணம் செய்ய வேண்டுமானால் நீங்கள் IRGC-இடம் அனுமதி பெற வேண்டும். இந்த கடல் பகுதிக்குள் நுழைய முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் […]
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 112 பேர் பலி; 837 பேர் காயம்

இஸ்ரேல், நடத்திய தாக்குதல் காரணமாக லெபனானில் 112 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தாக்குல்களில் 837 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கட்டிடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் 2 வார காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.