பெண்களை கடத்தல் மற்றும் விலங்கு வன்கொடுமை: எட்மண்டன் நபர் மீது 26 குற்றச்சாட்டுகள்

எட்மண்டனைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவர், ஐந்து பெண்களை கடத்தியுள்ளதுடன், ஒரு நாயை  துன்புறுத்தியதாக 26 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ALERT (ஆல்பர்ட்டா சட்ட அமலாக்கக் குழு) நடத்திய நீண்ட கால விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், பாதிக்கப்பட்ட ஒரு பெண் உதவிய கேட்டு காவல்துறையை அணுகியதிலிருந்து இந்த விசாரணை தொடங்கியது. அந்தப் பெண் சமூக ஊடகங்கள் வழியாகத் தொடர்பு கொள்ளப்பட்டு, எட்மண்டனுக்கு வரவழைக்கப்பட்டதாகவும், பின்னர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் […]

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது

கணேமுல்ல, பொல்லன வடக்கு பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடபிரிவு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரிடமிருந்து 12 கிலோகிராம் 300 கிராம் ஐஸ் போதைப்பொருள், 9 கிலோகிராம் 946 கிராம் ஹெரோயின், ஒரு மோட்டார் சைக்கிள், தராசுகள் மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது […]

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது […]

கனடா ஸ்டோலரி குழந்தைகள் மருத்துவமனையில் தட்டம்மை பரவல் எச்சரிக்கை – ஆல்பர்ட்டா சுகாதார சேவை

ஆல்பர்ட்டா சுகாதார சேவை (AHS), கடந்த வார இறுதியில் ஸ்டோலரி குழந்தைகள் மருத்துவமனையின் (Stollery Children’s Hospital) பல துறைகளுக்கு வந்த பொதுமக்களுக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 4, 2026 அன்று கீழ்க்கண்ட நேரங்களில் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது: அவசர சிகிச்சை பிரிவு (Emergency Department): அதிகாலை 4:17 மணி முதல் இரவு 10:40 மணி வரை. எக்ஸ்-ரே பிரிவு (X-Ray Department): இரவு 7:16 […]

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கொடூரமான தாக்குதல்கள்: 14 வயது சிறுவன் கைது

தெற்கு சிம்கோ (South Simcoe) காவல்துறை, ஒரு மாற்றுத்திறனாளி நபர் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவனை கைது செய்துள்ளது. இந்தத் தாக்குதல் வீடியோ எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலக்கு வைக்கப்பட்ட நபர்: பிராட்போர்டு வெஸ்ட் கில்லம்பரி (Bradford West Gwillimbury) சமூகத்தைச் சேர்ந்த, பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி நபர் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் முறை: ஒரு கும்பலால் அந்த நபர் […]

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய நடைமுறை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அன்பளிப்புக்களை வழங்குவதோ அல்லது அவற்றை சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு விருந்துபசாரங்களுக்காக பொலிஸ் அதிகாரிகளிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்திடம் நிதியுதவி கோருவதோ முறையற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளித்தரப்பினரின் பங்களிப்புடன் பொலிஸ் […]

மீண்டுமொருமுறை மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது – சஜித் பிரேமதாச

ஏப்ரல் மாதத்தில் 11சதவீதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீண்டுமொரு முறை 30 சதவீத மின்கட்டண அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் 41.5 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கிறது. இதில் பாதியான 20.5 பில்லியன் ரூபா தரம் குறைந்த நிலக்கரி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே […]

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எரிபொருள் பௌசர் கவிழ்ந்து விபத்து

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் புவகஹவெல பகுதியில் 33,000 லீற்றர் எரிபொருளுடன் பயணித்த பௌசர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பௌசரில் ஏற்பட்ட கசிவு காரணமாக பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் வழிந்தோடியது. இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள், தீ விபத்து ஏற்படும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் வாளிகள் மற்றும் போத்தல்களுடன் அவ்விடத்தில் திரண்டனர். வீதியோர வடிகால்களில் ஓடிய எரிபொருளைச் சேகரிப்பதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் காட்டியதால் […]

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் உள்வாங்கப்படவில்லை – ட்ரம்ப்

ஈரானுடனான இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு காரணமாகவே லெபனான் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், அந்த அமைப்பு மீதான தாக்குதல் தொடரும் என ட்ரம்ப் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து கேட்கப்பட்ட போது, அதனை ஒரு தனிப்பட்ட சிறு மோதல் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஈரானிய அரச ஊடகங்களினால் அறிக்கையிடப்பட்டு, […]

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்குச் செய்த நன்மை என்ன?

நிவாரணங்கள் வழங்குவதாக வாக்குறுதியளிக்கும் அரசாங்கம், அவை நடைமுறைக்குச் சாத்தியமானவையா என்பதைக் கற்றறிந்த பின்னரே அதனை அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: “தித்வா புயலின் போது தகரம் ஒன்றிற்கு 20 இலட்சம் ரூபாயும், காணி ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபாயும் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக நிவாரணப் பொதி வழங்கப்படும் என அறிவித்தார்கள். தற்போது […]