பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைப்பதை ஏற்க முடியாது – உதய கம்மன்பில

பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று வியாழக்கிழமை கல்கிசை நீதவான் […]
உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடிக்குள் சிக்கும் நிலையில் இலங்கை – சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர் எச்சரிக்கை

2022 ஆம் ஆண்டு முகங்கொடுத்த தீவிர பொருளாதார நெருக்கடியின் பின்னர், வெளியக அதிர்ச்சிகளைக் கையாள்வதற்கான இலங்கையின் இயலுமை பலவீனமான நிலையிலேயே உள்ளது. இத்தகைய பின்னணியில் மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், அது நாட்டின் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச்செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிலைய ஆய்வாளர் கலாநிதி ரஜினி கமகே எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்களால் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் […]
சுகாதார அமைச்சின் முறையற்ற நிர்வாகம்; வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி!

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நெருக்கடிக்கு சுகாதார அமைச்சின் முறையற்ற நிர்வாகமே பிரதான காரணம். அரசாங்கம் தனது கட்சிக்கு ஆதரவான வைத்தியர்களை தொழிற்சங்கங்களுக்குள் புகுத்தி, சுகாதாரத்துறையைத் தனது முழுமையான அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது என மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஜீவ குற்றம் சுமத்தியுள்ளார். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்புத் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். […]
பாதாள உலககுழுவின் எதிர்த்தரப்பைச் சேர்ந்தவரைப் படுகொலை செய்யத்திட்டம்: சந்தேகநபர்கள் கைது
ரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலககுழு உறுப்பினர் என அறியப்படும் கரந்தெனிய சுத்தாவின் எதிரித் தரப்பு முக்கியஸ்தர் ஒருவரைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலுக்கமைய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 109 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும், பாரியளவான போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழு உறுப்பினர் என அறியப்படும் சோபன ஹந்தி ஜயலத் டி சில்வா எனும் கரந்தெனிய […]