கணிசமான அந்நிய செலாவணி சேமிப்பு – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வு தற்போது ஓரளவிற்கு குறைந்துள்ளதால், கணிசமான அந்நிய செலாவணி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரகே கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், க்யூஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாலும், ஒற்றை மற்றும் இரட்டை நாட்களில் எரிபொருள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாலும், எரிபொருள் நிலையங்களில் இருந்த வரிசைகள் மறைந்துவிட்டன. தற்போது நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருந்தபோதிலும், சாரதிகள் எரிபொருள் நிரப்ப ஆர்வம் காட்டுவதில்லை என்று எரிபொருள் […]
நீதிமன்றிலிருந்து அர்ச்சுனாவுக்கு அழைப்பு

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு வைத்தியரை அவதூறுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் செய்திகளையும், பரப்புரைகளையும் மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே தெல்லிப்பழைப் புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இன்னும் சில தரப்புகளுக்கும் எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், தனியார் ஊடகம், வலையொளி தளங்கள் […]
மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 183,979 ஆகும். இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.7% சதவீத வீழ்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.அதன்படி இந்தியாவில் இருந்து மாத்திரம் 47,533 (26%) […]
ஈரானில் எஞ்சியுள்ள உள்கட்டமைப்புகளை அழிக்கும் பணியை அமெரிக்க இராணுவம் “இன்னும் தொடங்கவே இல்லை” – டொனால்ட் ட்ரம்ப்
ஈரானில் எஞ்சியுள்ள உள்கட்டமைப்புகளை அழிக்கும் பணியை அமெரிக்க இராணுவம் “இன்னும் தொடங்கவே இல்லை” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஈரானுக்கு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “உலகிலேயே மிகப் பெரியதும், மிகவும் சக்திவாய்ந்த எமது இராணுவம், ஈரானில் எஞ்சியுள்ளவற்றை அழிக்கும் பணியை இன்னும் தொடங்கவே இல்லை. அடுத்து பாலங்கள், பிறகு மின் உற்பத்தி நிலையங்கள்! புதிய ஆட்சித் தலைமைக்கு என்ன […]
குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: தீ விபத்து

குவைத்தின் அரசிற்குச் சொந்தமான மினா அல்-அஹ்மதி (Mina al-Ahmadi) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலினால் சுத்திகரிப்பு நிலையத்தின் பல பிரிவுகளில் தீ பரவியுள்ளதாக குவைத் தேசிய செய்தி நிறுவனமான (KUNA) தெரிவித்துள்ளது. பாதிப்பு: குவைத் பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு (KPC) சொந்தமான இந்த நிலையத்தில் உள்ள பல செயல்பாட்டுப் பிரிவுகளில் (Operational units) தீப்பிடித்துள்ளது. அவசர நடவடிக்கை: தீயைக் கட்டுப்படுத்தவும் ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கவும் […]
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை வழக்கு: ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்க கோரிய சுமந்திரன்

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களின் தவறான செய்திகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இந்த வழக்கில் எம்.ஏ. சுமந்திரன் இரண்டாவது சந்தேகநபரான (கொல்லப்பட்ட விரிவுரையாளரின் மகள்) சார்பாக முன்னிலையானதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்த அவர், தான் பாதிக்கப்பட்ட தரப்பினர் (உயிரிழந்த விரிவுரையாளரின் குடும்பத்தினர்) சார்பாகவே முன்னிலையானதாகத் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களுக்கு நீதிமன்றம் பொதுவான […]
காட்டுக்கு தீ வைத்தவருக்கு அபராதம்

நல்லதண்ணி, ஸ்ரீ பாத வீதியில் அமைந்துள்ள ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்கு சட்டவிரோதமான முறையில் தீ வைத்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நேற்று(02) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரூ. 91,100 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். சந்தேக நபர் […]
நாவற்குழி விகாரை பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம், நாவற்குழி விகாரையில் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்துள்ளது. சம்பவம்: கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி, நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி ஒருவர் விகாரை வளாகத்தில் உள்ள பில்டர் (Filtered) நீரினைப் பெறுவதற்காகச் சென்றுள்ளார். அந்த வேளையில் விகாரைக்குப் புதிதாக வந்திருந்த இளநிலை பிக்கு அந்தச் சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது தாயாரிடம் தெரிவிக்கவே, தாயாரால் சாவகச்சேரி […]
திருமதி சங்கரலிங்கம் ராசபுஸ்பம்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சங்கரலிங்கம் ராசபுஸ்பம் அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை சம்மாட்டியார் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பூமணி, ராணி, இரத்தினமணி, மலர், தங்கன், ரஞ்சிதம், செல்லம் ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற ரமேஷ், மோகன், விஜி, பாப்பிள்ளை, அம்புலி ஆகியோரின் தாயாரும், இஷானி, பவி, வில்சன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் […]
கொடிகாமம் பொலிஸ் அதிகாரி கொலை: பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் சரண்

ழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் (Tractor) மோதி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம்: கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி, கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர். பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தின் சாரதி, பொலிஸார் மீது இயந்திரத்தை மோதிவிட்டுத் தப்பிச் […]