மத்திய கிழக்கு போர்; மூன்று நாடுகளும் சர்வதேச சட்டங்களை மீறுகின்றன- சர்வதேச நிபுணர்கள் கூட்டாக கடிதம்

மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளால் சர்வதேச சட்டம் தீவிரமாக மீறப்படுவதாகக் கருதி, 100-க்கும் மேற்பட்ட சர்வதேச சட்ட நிபுணர்கள் “ஆழமான கவலை” தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கல்வியாளர்களும் முன்னாள் அரசு அதிகாரிகளும், அமெரிக்காவுடனான தங்கள் தொடர்பின் காரணமாக, தங்கள் கவனம் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சட்ட நிபுணர்கள், போரில் அமெரிக்காவின் நடவடிக்கைகளும் வாக்குமூலங்களும் மிகவும் கவலைக்குரியவை என்றும், சில சந்தர்ப்பங்களில் அவை சர்வதேச சட்ட மீறல்களாக […]

அமெரிக்க இராணுவத் தளபதியை பதவி நீக்கிய பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்

அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜோர்ஜை நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கியுள்ளார். இராணுவத்தின் 41 ஆவது படைத் தளபதியான ராண்டி ஜோர்ஜ், இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே உடனடியாகப் பணி ஓய்வு பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இராணுவத்தின் பயிற்சி மற்றும் உருமாற்றக் கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டேவிட் ஹோட்னே […]

மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை

ஈரானின் பெரிய பாலம் தாக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கப்போவதாக தெரிவித்துள்ள ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் உள்ள 8 முக்கிய பாலங்களை தாக்கி அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இலக்குவைத்துள்ள பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டுள்ளதையடுத்து வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முக்கியமாக குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா பாலம் இடம்பெற்றுள்ளது. அதைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம், ஷேக் கலீஃபா […]

நுவான் துஷார நீதிமன்றத்தில் வழக்கு

2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடையின்மைச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகத் தெரிவித்து, வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று(02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க, பொருளாளர் சுஜீவ முதலியப்ப மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக […]

அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!

இலங்கையின் நுகர்வோர் சந்தையில் நிலவும் அரிசி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் மாற்று அரிசி இரகமான ஜிஆர் 11-ஐ இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் நுகர்வோர் சந்தையில் நிலவும் அரிசி தேவையினை பூர்த்தி செய்யவும், உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலையினை நிலைப்படுத்தவும் அரசாங்கம் இந்த தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட சில அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு […]

காஸாவிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் இரண்டு வருடங்களுக்குப்பின் பெற்றோருடன் இணைவு

கடும் போருக்கு மத்தியில், பிறந்து இரண்டு வருடங்களாகத் தனது பெற்றோரைப் பார்த்திராத 11 பச்சிளம் குழந்தைகள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுக்குழுவின் ஊடாக மீண்டும் காஸாவில் உள்ள தங்களது பெற்றோரிடம் இணைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஸாவின் அல்-ஷிபா வைத்தியசாலையை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டபோது, அங்கிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 29 முன்கூட்டியே பிறந்த குழந்தைகள் அவசரமாக எகிப்திற்கு வெளியேற்றப்பட்டனர். அப்போதைய போர்ச் சூழல் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளினால், பெற்றோர்கள் குழந்தைகளுடன் செல்ல […]

டிக் டொக் வீடியோக்களைப் பார்த்த சிறுவனை இரும்புக்கம்பியால் சுட்ட தந்தை

தெனியாய பகுதியில் பாடசாலைப் பாடங்களைப் படிக்காமல், கையடக்க தொலைபேசியில் டிக் டொக் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை, அவரது தந்தையே சூடான இரும்புக்கம்பியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார். இந்த கொடூர செயலைச் செய்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதி இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் வேலைக்குச் சென்ற தந்தை தனது கையடக்க தொலைபேசியை வீட்டில் மறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதனைப் பயன்படுத்திய […]

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, தடையின்றி உரங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அனைத்து விவசாய சேவை நிலையங்களையும் வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க இந்த விடயம் தொடர்பாக விடுத்துள்ள விசேட அறிக்கையில், விவசாயிகள் எவ்வித சிரமமுமின்றி உரங்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக, […]

தேர்தலில் கோட்டாபயவை வெற்றி பெற செய்வதற்காக ஈஸ்டர் குண்டு தாக்குதல் இடம்பெற்றது?

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை வெற்றி பெற செய்வதற்காக ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடப்பட்டதாக ஆசாத் மௌலானா சொன்ன கருத்தை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து அப்பாட்டமான பொய்யென நிரூபித்துள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவரின் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது அமெரிக்காவில் இயங்கும் சிறந்த புலனாய்வு நிறுவனமான எரிடேஜ் பவுண்டேசன் (The Heritage Foundation) ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு முன்னர் அறிக்கை […]

777 மெழுகுவர்த்தி தாங்கிகளை சேகரித்து கிளிநொச்சியில் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் பதிவுசெய்த பெண்!

யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்துவரும் குமுதினி கோபாலகிஸ்ணன் கின்னஸ் (Guinness) உலகசாதனை பதிவேட்டில் தனது சாதனையினை பதிவு செய்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு 01.04.2026 அன்று ஏ9 வீதி திருமுறிகண்டி பகுதியில் நடைபெற்றுள்ளது. சேகரித்த மெழுகுவர்த்தி தாங்கிகளை வைத்து இந்த சாதனை பதிவினை மேற்கொண்டுள்ளார். இந்த சாதனைக்காக அவர் 30 ஆண்டுகளாக மெழுகுவர்த்தி தாங்கிகளை பல்வேறு நாடுகளில் சேகரித்து வந்துள்ளார். இதற்கு முன்னர் 527 மெழுகுவர்த்தி தாங்கிகளை வைத்து அமெரிக்காவினை சேர்ந்த பெண் ஒருவர் […]