மட்டக்களப்பில் பெண்களுக்கு நடந்த வன்முறைக்கு நீதிகோரிப் போராட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், நடந்த அநியாயத்திற்கான நீதியை பெற்று தருமாறும் கோரிக்கை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(26.03.2026) கொக்கட்டிச்சோலை நகரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பட்டம் இடம்பெற்றுள்ளது. கடந்த […]

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலையில் பிள்ளையான் குழுவுக்கும் தொடர்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றையதினம்(26.03.2026) வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்றவாளிகள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மறு விசாரணைக்காக மீண்டும் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி மதிசுதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மித்தெனிய ஐஸ் போதை இராசயனங்கள் புதைக்கப்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மனம்பேரி அரச தரப்பு சாட்சியாக முன்னர் மாறியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கொலைக் குற்றச்சாட்டின் […]

ஜலசந்தி ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் அலிரேசா டங்சிரி! ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் தொடர்ந்து வருகிறது. 4வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், தற்போது வரை போர் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர […]

விபத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் கைது

பத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். அக்கறைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டவரை நீதிமன்றத்திற்குச் செல்லவிடாது தடுத்து, அதனைச் சமரசமாக முடித்து வைப்பதாகக் கூறி, விபத்தை ஏற்படுத்தியவரிடம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணம் கோரியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபர், 4,000 ரூபாவினை லஞ்சமாக வழங்க முயன்றபோது, அங்கு சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலஞ்ச […]

இத்தாலி பொலிஸில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கையர் சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்பு

இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ – தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிலானோ நகரில் அமைந்துள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடலுக்கு அருகில் அவரது சேவை துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தனது […]

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை விஜயம்

ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மர்ஷாவின், இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணத்திற்காக 03/26 அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருடன் தூதுக்குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களும் வந்திருந்தனர். அவர்கள் ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து 03/26 அன்று காலை 10.52 மணிக்கு ஏரோஃப்ளோட் விமானம் SU-588 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் ஜகரியன் மற்றும் பிறர் […]

நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் புதன்கிழமை (25) நடைபெற்ற ஐந்தாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 3-2 என்ற ரீதியில் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து தென்னாபிரிக்கா: 187/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கோனர் எஸ்டெர்ஹுய்ஸென் 75 (33), றுபின் ஹெர்மன் 39 (31), வியான் முல்டர் 31 (29), டியான் பொரெஸ்டர் ஆ.இ 21 (13) […]

பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு நிவாரணப் பொதி வழங்க வேண்டும்

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு (MSMEs) அரசாங்கம் உடனடியாக நிவாரணப் பொதியொன்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து புதன்கிழமை (25) அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள்: பொருளாதாரத்தில் MSME துறையின் முக்கியத்துவம்: வேலைவாய்ப்பு: நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் ஊடாக சுமார் 4.5 மில்லியன் (45 இலட்சம்) பேருக்கு வேலைவாய்ப்புகள் […]

சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும் அபிவிருத்திப் பணிகளை நாங்கள் நிறுத்தவில்லை

“சர்வதேச யுத்தச் சூழல் காரணமாக நாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை நாங்கள் நிறுத்தவில்லை.” என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ‘டிட்வா’ புயல் காரணமாக நாடளாவிய ரீதியில் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் புதன்கிழமை (25) அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் நுவரெலியா மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, நுவரெலியா ஹாவாஎலிய ‘சிட்டி சந்தி’ பகுதியில் இடம்பெற்றது. “முந்தைய […]

சோனியா காந்தியின் உடல்நிலை பாதிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவுமனையில் செவ்வாய்க்கிழமை (24) அன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை சோனியா காந்தி உணர்ந்ததாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் உடல்நிலை கவலைக்குரிய தீவிர பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து […]