நாட்டின் உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்கு இணக்கம்

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்காக, விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன. விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உர நிறுவனங்கள் இதனைத் தெரிவித்தன. மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும், இம்முறை சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய […]
புளியங்கூடலைச் சேர்ந்த பெண் பாதசாரி கடவையில் வாகனம் மோதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை – புளியங்கூடல் பகுதியை சேர்ந்த 70 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 18 ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்றையதினம் அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்தனர். இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இருவரும் வழிபட்டுவிட்டு பாதசாரி கடவையூடாக […]
யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் இல்லை – அருண் சித்தார்த்

யாழ். பல்கலைக்கழகம் தமிழர்களின் பண்பாட்டுக் காவலர் இல்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார். நேற்று முன்தினம் (23) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த இலங்கை தேசிய கொடியை இறக்கி கருப்பு கொடி ஏற்றிய காரணத்துக்காக விசாரணைக்கு அந்த மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அதன் […]
போதைப்பொருள் வர்த்தகம் செய்த பெண்ணின்; சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்ட வருமானத்தில் இந்தச் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது அதற்கமைய கொழும்பு -14 மற்றும் ஜா-எல பகுதிகளில் அமைந்துள்ள 514 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காணி, 4 கடை அறைகள், மூன்று மாடி வீடு மற்றும் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய […]
இயற்கை எரிவாயு; ஒப்பந்த விலக்கு நிலையை கட்டார் எனர்ஜி நிறுவனம் பிரகடனம்?

இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான தமது நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோக ஒப்பந்தங்கள் சிலவற்றில் போர்ஸ் மேஜர் எனப்படும் ஒப்பந்த விலக்கு நிலையை கட்டார் எனர்ஜி நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போரினால் ஏற்பட்டுள்ள உற்பத்தி மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போர்ஸ் மேஜர் என்பது எதிர்பார்க்க முடியாத அசாதாரண நிகழ்வுகளின் போது, ஒரு தரப்பினர் தமது ஒப்பந்தக் கடமைகளில் இருந்து […]
மத்திய கிழக்கு நிலவரம் அநுரவுக்கும் – மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய […]
நலன்புரித் திட்ட முதியோர் கொடுப்பனவுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இக்கொடுப்பனவுகள் நாளை 26ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைகள் […]
மோசமான காட்டுத்தீ அபாயங்களை ஐரோப்பா சந்திக்கிறது – ஐ.நா

ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமான காட்டுத்தீ அபாயங்களைச் சந்தித்து வருவதாகவும், ஆனால் அத்தகைய பேரழிவுகளை எதிர்கொள்ள அந்த நாடுகள் இன்னும் “தயார் நிலையில் இல்லை” என்றும் புதிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவின் தெற்குப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருவதால், காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. 2026ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பாவில் […]
போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 82 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்

ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் 82,417 பொது மக்களின் குடியிருப்புகள் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அமைப்பான அதன் தலைவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தம் 281 வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.