இணுவிலில் தாக்குதல் சம்பவம்: நால்வர் காயம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை நான்காவது தாரமாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அங்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியை விட்டுவிட்டு இணுவில் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் உறவினர்கள் மூவர் இணுவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு […]
விபத்தில் இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு
கதிர்காமத்தில் இருந்து செல்லக்கதிர்காமம் நோக்கிச் சென்ற சபாரி ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம்(22.03.2026) கதிர்காமம் மகசேன் வட்டார வீதி சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சபாரி ரக வாகனம் வீதிச் சந்தியைக் கடக்க முயன்றபோது, சாரதியின் வலது புறமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் கே.ஏ.சந்தன […]
கொலம்பியாவின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 வீரர்கள் பலி

ன் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தீவிர விசாரணை நடந்து வருகிறது. விமானம் […]
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவில் இலங்கையின் ஆடைத்துறை தங்கியிருப்பது ஆபத்து!

இலங்கை ஆடைத் தொழில்துறை தொடர்ந்தும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை மட்டும் தங்கியிருப்பது பெரும் ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழில்துறையின் உயர்மட்ட அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் தலைவர் பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை தற்போது ஈட்டி வரும் ஆடை ஏற்றுமதி வருமானத்திற்கும், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கிற்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. […]
லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவித்தல்!
லிட்ரோ எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும். அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளது. அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும். எவ்வாறாயினும், […]
அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள்!

அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்களே இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் அரசே கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெருக்கடியான காலப்பகுதிகளில் அரசு மிகவும் தாமதமாகவே தீர்மானங்களை எடுக்கின்றது. அண்மைய ‘டித்வா’ புயல் தாக்கத்தின் போதும் அரசு […]
பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள எந்தவொரு பரீட்சையையும் ஒத்திவைக்கவோ அல்லது மறு அட்டவணைப்படுத்தவோ தற்போது எந்த திட்டங்களும் இல்லை என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவதும் […]
செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அமர்வில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமரவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியிலாளர் சி.த.காண்டீபனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் சபையில் நீண்ட விவாதமும் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு இடம்பெறுவதற்கு […]
விலை நிர்ணய ஏற்பாட்டைத் தொடர்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தைப் பெறத் தவறினால் எரிபொருள் விலைகள் மீண்டும் உயரும் – அரசாங்கம் எச்சரிக்கை

தற்போதைய எரிபொருள் விலை நிர்ணய ஏற்பாட்டைத் தொடர்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கீகாரத்தைப் பெறத் தவறினால், மானியச் செலவுகளை நுகர்வோர் மீதே சுமத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இலங்கைஅரசாங்கம் எச்சரித்துள்ளது. இதனால் வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, அரசாங்கம் தற்போதைக்கு எரிபொருள் செலவின் ஒரு பகுதியைத் தாங்கிக்கொள்ளும் என்று கூறினார். இதன்படி, மே 1-ஆம் தேதி வரை ஒரு லிட்டர் டீசலுக்கு 100 […]
பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடுமென்ற உணவு இறக்குமதியாளர்களின் எச்சரிக்கையை மறுத்தார் வர்த்தகர்கள் சங்கத் தலைவர்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர். விலை உயர்வு: எரிபொருள் விலை உயர்வு கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி செலவுகள் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் இந்த விலை அதிகரிப்பை உணர வேண்டியிருக்கும். தட்டுப்பாடு இல்லை: “நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது” என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜி. […]