ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளனர்?

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐ.நா பிரதி நிதிகள் குழுவொன்று எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாகவும் யாழில் பல தமிழ்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய தம்பதி ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில்…

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகிய பிரித்தானிய தம்பதியினரின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நிலவி வரும் சூழலில், ஈரானிய அதிகாரிகள் இந்தத் தம்பதியினரை வேண்டுமென்றே போர் அபாயம் உள்ள பகுதிகளில் தடுத்து வைத்து, அவர்களை ‘மனிதக் கேடயங்களாக’ பயன்படுத்துவதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஆண்டு மோட்டார் […]

உலகளாவிய ரீதியில் 2.1 பில்லியன் மக்கள் குடிநீரின்றி வசிக்கிறார்கள்!

உலகில் இன்னும் 2.1 பில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியின்றி தவிப்பதாக யுனெஸ்கோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் தண்ணீர் சேகரிக்கும் பொறுப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளே ஈடுபடுகின்றனர். உலகளவில் பெண்கள் நாளொன்றுக்கு சுமார் 25 கோடி மணிநேரத்தை தண்ணீர் சேகரிப்பதற்கே செலவிடுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வு நேரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல் […]

நெதர்லாந்தில் ஈரான் அதிருப்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு!

நெதர்லாந்து நாட்டில் ஈரான் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த விமர்சகர் ஒருவர் சுடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஈரான் அதிருப்தியாளர்களுக்கு (Dissidents) அந்நாட்டு அரசு பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் வசித்து வந்த ஈரான் அரசுக்கு எதிரான அரசியல் விமர்சகர் ஒருவர், மர்ம நபர்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் அங்குள்ள ஈரான் அதிருப்தியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் அந்நாட்டில் உள்ள முக்கிய ஈரான் […]

புதிய பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (21.03.2026) முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீடச் சபை சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.இரகுராமின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு வரும் வரையில் பல்கலைக்கழகங்களில் பீடாதிபதி தெரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் […]