ஹிஸ்புல்லா நிதியுதவியுடன் செயல்பட்ட பயங்கரவாத கும்பல் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேசிய பாதுகாப்பு அமைப்பினர், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்கி வந்த ஒரு “பயங்கரவாத வலைப்பின்னலை” வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது. இந்த கும்பல் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் ஒரு போலி வணிக நிறுவனத்தை (Fictitious commercial cover) நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் (Money […]
துப்பாக்கிகளுடன் இருவர் கைது!
களுத்துறை – பயாகல, மெட்டியமுல்ல பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து, வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் – 02, அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் – 10, கைவிலங்கு மற்றும் அதன் சாவி – 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவரும், அவருக்கு […]
துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை

துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் ஈரானால் எந்த வகையிலும் திட்டமிடப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எதிரிகளால் நடத்தப்படும் ‘போலிக் கொடி’ தாக்குதல்கள் என்றும், அல்லது பொறுப்பை மற்றொரு தரப்பின் மீது சுமத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சதிச் செயல்கள் என்றும் அவர் […]
நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி வெல்வார்!

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனத் தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை என்பது ஒரு உலகளாவிய ரீதியிலான சவாலாகும். இந்த நாடு மீண்டும் ஒரு வீழ்ச்சிக்குச் செல்லாமல் பாதுகாப்பதிலேயே நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம். எனவே, எந்தவொரு காரணத்துக்காகவும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசு […]
முதியவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டுக் கொலை!
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலுகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹொரணை – பொரலுகொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வாய்த்தர்க்கத்தின் போது, சந்தேகநபர் மண்வெட்டியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக […]
வடக்கு மீனவர்கள் இந்திய இழுவை மடி படகுகளால் தொடர்ந்தும் பாதிப்பு

உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவ அமைப்பு பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீதியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்ட விரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை என்றும், இந்தியன் […]
வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மீது அதிருப்தி!

வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றினை நேற்று அனுப்பி வைத்துள்ளது. வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கத்தின் விதிமுறைகளை மீறிய சிற்றூர்தி நடத்துனர் மற்றும் சாரதி ஒருவரையும் ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக சங்கத்தால் இடை நிறுத்தப் பட்டிருந்ததாகவும், அதே வேளை சங்க கட்டுப்பாட்டு அறிக்கையில் பதிவிடாத சிற்றூர்தி ஒன்றில் பயணிகளை ஏற்றி செல்ல வடமராட்சியில் அமைந்துள்ள வட மாகாண வீதி பயணிகள் போக்கு […]
ஈராக்கில் இருந்த நேட்டோவின் அனைத்துப் படைகளையும் நேட்டோ ராணுவக் கூட்டணி திரும்பப் பெற்றது

ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், ஈராக்கில் இருந்த தனது அனைத்துப் படைகளையும் நேட்டோ ராணுவக் கூட்டணி நேற்று அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. ஈராக்கில் பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் அங்கிருந்து ஐரோப்பாவிற்குப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிற்கான நேட்டோ உயர்மட்டத் தளபதி ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் (Alexus Grynkewich) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேட்டோ பணியாளர்களை ஈராக்கிலிருந்து பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய உதவிய ஈராக் […]
வைத்தியசாலை காவலாளியை தாக்க முற்பட்டதாக இருவர் கைது
உடையார்கட்டு – மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை பாதுகாப்பு காவலாளியை தாக்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(20.3.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உடையார்கட்டு – மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம்(19) மாலை சென்ற நபர் ஒருவருக்கும் காவலாளிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனை தொடர்ந்து வைத்தியசாலை காவலாளியை குறித்த நபர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டு நேற்றையதினம் (20) மூங்கிலாறு பிரதேச […]
ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளனர்?

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐ.நா பிரதி நிதிகள் குழுவொன்று எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாகவும் யாழில் பல தமிழ்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.