மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதப்படுத்தும் மத்திய நிலையம் திறப்பு

நானுஓயா சமர்செட் பகுதியில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதப்படுத்தும் மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டதோடு, கழிவுகளை சேகரித்துக் எடுத்துச் செல்வதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களும் புதன்கிழமை (18) வழங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” (World Recycling Day) முன்னிட்டு பதப்படுத்தும் நிலையமும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கரவண்டி (Electronic Tree-Wheeler) மற்றும் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் […]
13.56 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான மதிப்பாய்வு அறிக்கையினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபை அனுமதி கோரியுள்ளது. இந்த கட்டண முன்மொழிவினை மின்சார சபையானது, 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ் […]
ஜெர்மன் யுவதியிடம் அத்துமீறிய தொல்பொருள் திணைக்கள ஊழியருக்கு விளக்கமறியல்!
அநுராதபுரம், மிஹிந்தலை ரஜமஹா விகாரையைப் பார்வையிடச் சென்ற ஜெர்மன் நாட்டு இளம் யுவதியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்கள ஊழியரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும், அவர் மிஹிந்தலை தொல்பொருள் திணைக்கள அலுவலகத்தில் […]
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 10க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன!

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். தற்போது நிலவும் யுத்தம் போன்ற இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 10க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரசாங்கத்துடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் வேளையில், பொலிஸாரின் வகிபாகத்தை எவரும் குறைத்து மதிப்பிட […]