ஒற்றை இரட்டை எண்களுக்கு அமைய எரிபொருள் விநியோகம்

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி […]

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்?

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம், இன்று (19) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கமைய, இன்று காலை குறித்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இதேவேளை, உலகில் […]

கச்சா எண்ணெய் விலை 110 டொலராக உயர்வு

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை நிலவிய விலையை விட 5% க்கும் அதிகமாக உயர்ந்து, 109.91 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், சிறிது நேரத்தின் பின்னர் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. அதேவேளை, பிரித்தானியாவின் […]

அமெரிக்கா சிவில் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தடை செய்யப்பட வேண்டும்

சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தடை செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதனைத் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மேலும் தெரிவித்துள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில […]

கடலில் நீராடிய மாணவன் நீரில் மூழ்கி பலி

ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் ‘சறுக்கு விளையாட்டில்’ ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, பிரதேசவாசிகள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை […]

ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சவுதி வெளியுறவு அமைச்சர்

சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு என சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இவ்வாறான தாக்குதல்கள் மூலம் டெஹ்ரான் எவ்வித நன்மையையும் […]

இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து இன்றையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டமையை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பொலிஸாரால் அழைப்பு விடப்பட்ட மூன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இன்றையதினம் […]

அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor ) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உயர் மட்ட சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், சிறப்பு தூதர் செர்ஜியோ கோர், அரசின் சிரேஷ்ட […]

மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதப்படுத்தும் மத்திய நிலையம் திறப்பு

நானுஓயா சமர்செட் பகுதியில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதப்படுத்தும் மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டதோடு, கழிவுகளை சேகரித்துக் எடுத்துச் செல்வதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களும் புதன்கிழமை (18) வழங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” (World Recycling Day) முன்னிட்டு பதப்படுத்தும் நிலையமும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கரவண்டி (Electronic Tree-Wheeler) மற்றும் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் […]