சிறை படத்தின் 75 ஆவது நிறைவு நாள் கொண்டாட்டம்

‘புதுமுக நடிகருக்கு ரசிகர்கள் எம்மை ஏற்றுக் கொள்வார்களா!? என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆனால் எம்முடைய முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் வழங்கினர். இதற்கு நன்றி’ என சிறை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் எல் கே அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு ,எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா […]
‘நான் இயக்குநரானதற்கு தனுஷ் தான் காரணம் ‘ – கென் கருணாஸ்

‘எம்முடைய திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்தியவர் இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ படத்தில் பணியாற்றும்போது தனுசிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். நான் இயக்குநரானதற்கு தனுஷ் தான் காரணம்’ என ‘யூத்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகும் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் தயாரிப்பில் இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில் குமார் ,மீனாட்சி தினேஷ் , பிரியன்யான்ஷி […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம்

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் 16ஆவது நாட்களை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட சமீபத்திய வீடியோ ஒன்றில் அவருக்கு வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் கிளம்பியுள்ளது. கடந்த மார்ச் 13 அன்று நெதன்யாகு தனது […]
‘ 4 விண்டோஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களான சத்யராஜ் – வெற்றி முதன்மையான வேடங்களில் இணைந்து நடித்திருக்கும் ‘4 விண்டோஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘புளிப்பு’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நரேந்திரன் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘4 விண்டோஸ்’ திரைப்படத்தில் சத்யராஜ் , வெற்றி, பிரார்த்தனா நாதன், கோவை சரளா, சின்னி ஜெயந்த் , சச்சு, எம் எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் ,மாறன், அருள்தாஸ், லிசி அண்டனி, வையாபுரி, டி […]
ஆதார வைத்தியசாலை பிணவறையில் யுவதியின் சடலத்தை வன்புணர்ந்த விவகாரம்: அதிரடி திருப்பம்

டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான இழிவுபடுத்தல்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு கேமரா (CCTV) தொகுதி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று ஊழியர்களும் ஏற்கனவே இருமுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நோர்வூட் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் […]
புகையிரதப் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் தீவிரம்

மலையகப் புகையிரத மார்க்கத்தில் கண்டி முதல் பதுளை வரையிலான தண்டவாளங்களைப் புனரமைக்கும் பணிகள் புகையிரத ஊழியர்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மலையகப் புகையிரத மார்க்கத்தின் பல இடங்களில் மண்சரிவு மற்றும் தண்டவாளங்கள் தாழ் இறக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதியிலான புகையிரதப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகளின் போது பின்வரும் […]
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படம்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக தனது திரையுலகப் பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் இயக்கும் முதல் படம் ‘சிக்மா’ (Sigma) என்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தைச் சுற்றி புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக நட்சத்திரங்களின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகும்போது தங்களது தந்தையின் பெயரை அடையாளமாக பயன்படுத்துவார்கள். ஆனால், ஜேசன் சஞ்சய் அந்த நடைமுறையைத் தவிர்த்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]
மத்திய கிழக்கு போரை ஆரம்பித்தது ஒரு தரப்பாக இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வரப்போவது வேறொரு தரப்பாக இருக்கும்?

மத்திய கிழக்கு போரை ஆரம்பித்தது ஒரு தரப்பாக இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வரப்போவது வேறொரு தரப்பாக இருக்கும் என யுத்தம் தொடர்பான நிபுணர்களின் கணிப்பீடுகளில் தெரியந்துள்ளது. தென் சீனக் கடலில் நேற்று முன்தினம் (13.03.2026) சீனா தனது பலம் வாய்ந்த போர் கப்பல்கள் பலவற்றை நிறுத்தியுள்ளதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உலகத்தில் பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சீனா தாய்வானை ஆக்கிரமிக்கப் போகிறது என. ஆனால் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை பயன்படுத்துவது தவறானதாகும். ஏனென்றால் அகன்ற […]
இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்துகிறோம்!
இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், புதிய தாதியர் பயிற்சிக்காக 2918 பேரை இணைத்துக் கொள்ளும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (14.03.2026) அலரி மாளிகையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 2025ஆம் ஆண்டுக்குரிய, 2022ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 15 தாதியர் பாடசாலைகளில் மூன்று ஆண்டு காலப் பயிற்சியினைப் பெறவுள்ளனர். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் […]
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளமை அநீதியான செயலாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். கடந்த 9 ஆண்டுகளாக இந்நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமையை நாம் வழங்கவில்லை. இது மிகவும் அநீதியான செயலாகும். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு […]