பெருமளவிலான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்!

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை (14) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த பீடி இலைகள் லொறி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 1,654 கிலோகிராம் 615 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பீடி இலைகளை கடல் வழியாகக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றையும் பொலிஸார் […]

யாத்திரை சென்ற கார் விபத்து: சாரதி போதைப்பொருள் உட்கொண்டமை உறுதி!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் – ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான காரின் சாரதி, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி மாலை 4:30 மணியளவில் ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரோக்வுட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. காரை ஓட்டிச் சென்ற சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி […]

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே – பூகொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை (14) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பூகொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த பெண் பாதசாரி தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கப்புகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் என அடையாளம் […]

தகுதிகாண் போட்டி: மெக்சிகோ பயணத்தைத் தள்ளிப்போடுமாறு ஈராக் கோரிக்கை

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் தேசிய கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப் பயணம் செய்யத் தீர்மானித்துள்ளது. இருப்பினும், பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இந்தப் பயணத்தைத் தள்ளிப்போடுமாறு அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ஆர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திட்டமிட்டபடி இந்தப் போட்டி இடம்பெற்றால், எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி மெக்சிகோவின் மொன்டேரே நகரில் பொலிவியா அல்லது சூரினாம் ஆகிய அணிகளில் […]

அசோக ரன்வலவுக்கு நீதிமன்றம் பிடியாணை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிடியாணை பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக மஹர நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அவர் முன்னிலையாகவில்லை. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். விபத்து தொடர்பான சட்ட நடைமுறைகளின் ஒரு பகுதியாக […]

24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகன வழக்கு

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (மார்ச் 12) இரவு, மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியிலிருந்து அம்பாறை – நிந்தவூர் பகுதிக்கு 24 மாடுகளுடன் பயணித்த கனரக வாகனம் ஒன்றைக் கல்முனை தலைமையக பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது, முறையான அனுமதிப்பத்திரம் இருந்தபோதிலும், வாகனத்தில் மாடுகள் மிகவும் நெருக்கமாகவும், மிருகவதை […]

43,000 கட்டடங்கள் ஈரானில் சிதைவு

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில், சுமார் 43,000 பொதுமக்கள் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என ஈரானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அல் ஜசீரா செய்திச் சேவையின் தரவுகளை மேற்கோள்காட்டி, ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்குள்ளான கட்டடங்களில் 36,500 வீடுகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்பு அலகுகள் அடங்குகின்றன. தலைநகரில் மட்டும் சுமார் 10,000 கட்டடங்கள் இலக்கு […]

யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் மற்றும் பல்துறைக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்கள் உட்பட மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 14) காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், பின்வரும் மூவரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை […]

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட மறுசீரமைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சியைப் பலப்படுத்தும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், விசேட பயிற்சிப் பட்டறையொன்று வெள்ளிக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, மாத்தறை மாவட்டத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான புத்திக பத்திரன மற்றும் டி.எஸ். சேனநாயக்க ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வில் அருந்தவநாதன் அனோசன் (யாழ். மாவட்ட அமைப்பாளர்), தொகுதி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் […]

விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர்

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் எம். மணிகண்டன் – பி. அஜித் குமார் இணைந்து இயக்கியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன் ,சுதேவ் நாயர் , சிங்கம் புலி, முத்துக்குமார், ரிஷா, ‘அயலி ‘ […]