தீர்வில்லையெனில் பணிப்புறக்கணிப்பு; மின்சாரசபை சேவையாளர் சங்கம்

மின்சாரசபையின் சேவையாளர்களின் தொழில் காப்புறுதியை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் மறுசீரமைப்பினை செயற்படுத்தி மின்சார சபையை சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்கள் குறித்து இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். தீர்வின்றேல் நிபந்தனையற்ற வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை மின்சார சபையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார். இலங்கை மின்சாரசபை நேற்று திங்கட்கிழமை (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக ஒன்றுகூடி […]

பெருந்தோட்ட அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமனம்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று திங்கட்கிழமை(09)பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.