நோர்வே அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் தூதரகக் கட்டடத்திற்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என நோர்வே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் அதிகாலை 1.00 மணியளவில் […]
தொடர் தாக்குதல்களில் ஈரானின் 42 கப்பல்கள் தரைமட்டம்

ஈரானுக்கு எதிராக 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களில், அந்த நாட்டிற்குச் சொந்தமான 42 கடற்படைக் கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் ஈரானின் வான்படை பலம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகள் பெருமளவில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் மிக நெருங்கிய நிலையை எட்டியிருந்ததால், அவர்களின் அணுசக்தி வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய மையங்களை இலக்கு வைத்து […]
“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை”

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச […]
நவாலியில் தனியார் பேருந்தும் கன்டர் ரக வாகனமும் மோதி விபத்து
யாழ்ப்பாணம்- நவாலி வீதியில் கன்டர் ரக வாகனமும் தனியார் போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்றையதினம்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பேருந்தும், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கன்டர் ரக வாகனமும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் குறித்து சபையில் கடும் வாக்குவாதம்

நாடாளுமன்றத்தில் நேற்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் நேற்று நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தைப் பார்வையிடச் சென்றுள்ளமை குறித்துக் கருத்து வெளியிட்ட நளின் பண்டார, கோப் குழுவின் தலைவர் என்பவர் ‘டோபி’ வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர் அல்லர் எனச் சாடியுள்ளார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, வாய் இருக்கின்றது […]
அமைச்சருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசுக்குச் சுமார் 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுகூலம் கிடைக்கும் வகையில் கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்காக, இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் ஊழல் செய்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. […]
சர்வதேச சட்டப்படியே இலங்கை செயல்படும் – விஜித ஹேரத்

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இலங்கை முடிவெடுக்கும் என்றும், இதில் எந்தப் பக்கமும் சாராது நடுநிலையாகச் செயல்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கை என சொல்லப்படும் இந்த விவகாரத்தில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) விதிகளின்படியே இலங்கை அரசு செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகச் செயல்படும் எண்ணம் இலங்கைக்கு […]
எரிபொருள் கையிருப்பு; வெளியான முக்கிய தகவல்
தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.சிங்கப்பூர் ஊடாகப் […]
சர்வதேச மகளிர் தினம்

பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான சர்வதேச மகளிர் தினம் இன்று (08) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு உலகளாவிய இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது. முதலாவது மகளிர் தினம் 1909 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவில் கொண்டாடப்பட்டுள்ளதுடன், 1910 ஆம் ஆண்டில் ஜேர்மனிய செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின் என்பவரால் இது சர்வதேச […]
கடந்த வாரத்தில் ஈரானில் 3,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

கடந்த வாரத்தில் ஈரானில் உள்ள 3000 இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’யின் மூலம் முதல் வாரத்தில் அமெரிக்கப் படைகள் 3,000 இற்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன. நாங்கள் எங்கள் வேகத்தைக் குறைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் டொனால்ட் ட்ரம்ப், நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது. எந்தவொரு ராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் தொடரும் முன் […]