இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம்; விசேட கூட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை நிர்வகிப்பதற்கான ‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் […]

இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக ஈரான் நிலைதடுமாறிப் போயுள்ளது – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக ஈரான் நிலைதடுமாறிப் போயுள்ளதாகவும், தனது அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி சரணடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஈரான், தனது மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி சரணடைந்துள்ளது. அத்துடன், இனி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாகவே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. […]

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர்கள் நால்வரும் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும், தூதரகங்கள் ஊடாக இது தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் […]

குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 சந்தேகநபர்கள் உட்பட பலர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் பொலிஸாரால் 26,895 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சந்தேகத்தின் பேரில் 568 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 236 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 109 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 282 […]

கிழங்கன் வைத்தியசாலை முன்பாக போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை!

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்திற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று (08) ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பி. தமேந்தி பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(01) பிரிவின் கீழ் இந்தத் […]

ஊடகவியலாளர் சஜீவ விஜேவீர காலமானார்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் காலமானார். மறையும் போது அவருக்கு 51 வயதாகும். காலி மஹிந்த கல்லூரியின் பழைய மாணவரான அவர், அக்கல்லூரியின் சிரேஷ்ட மாணவர் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சிரச ரீவி நிறுவனத்தில் நிறைவேற்று நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றிய அவர், அக்காலப்பகுதியில் மிகவும் பிரபலமான “பரிசரயட்ட வினாடியக்” (சுற்றுச்சூழலுக்கு ஒரு நிமிடம்) நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் பின்னர் பத்திரிகைத்துறையில் நுழைந்த அவர், கடந்த காலங்களில் […]

தெற்கு கடற்பரப்பில் 2.08 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல்!

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். குறித்த மீன்பிடிப் படகு மற்றும் போதைப்பொருள் தொகுதி திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அதிலிருந்து 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் […]

இலங்கையின் இறைமையை மதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘IRIS Bushehr’ கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கைக்கே உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு ஒன்டாரியோ சுரங்கத் திட்டம்; சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூடுதல் தரவு தேவை?

வடக்கு ஒன்டாரியோவில் உள்ள Ring of Fire சுரங்கத் திட்டம் கூட்டாட்சி அல்லது மாகாண அரசுகளால் அதிகாரப்பூர்வமாக விரைவுபடுத்தப்படவில்லை. இருப்பினும், இந்த வாரம் டொரொன்டோவில் நடைபெற்ற ஒரு சுரங்க மாநாட்டில் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், இந்தத் திட்டம் முழு வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறினார். ஆனால் அங்கே தற்போது சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூடுதல் தரவு தேவை என்று முதல் நாடுகள் ஒரு பிராந்திய மதிப்பீட்டில் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் இரண்டு […]

விமர்சனத்துக்குள்ளாகியுள்ள ஒட்டாவாவின் “நிலைத்தொழில்கள் செயல் திட்டம்”

கனடாவில் எனர்ஜி துறையில் உள்ள வேலைகளை பாதுகாக்கும் நோக்கில் பிரதமர் மார்க் கார்னி அரசு வெளியிட்ட திட்டம், வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள தொழிலாளர்களை நேரடியாக ஆதரிக்கும் புதிய நடவடிக்கையாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக “ஜஸ்ட் டிரான்ஸிஷன்” (நியாயமான மாற்றம்) என அழைக்கப்பட்ட இந்த புதிய கூட்டாட்சி “நிலைத்தொழில்கள் செயல் திட்டம்”, தற்போதுள்ள கொள்கைகளைத் தாண்டி எனர்ஜி துறையின் தொழிலாளர்களுக்காக தனிப்பட்ட நடவடிக்கைகளை பெரிதாக முன்வைக்கவில்லை. கனடாவின் இயற்கை வளங்கள் துறை […]