ஈரானில் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பண்டார் அப்பாஸ் நகருக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஈரானில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். கடந்த செவ்வாய்க்கிழமை, பார்ஸ் (Fars) மாகாணத்தின் […]

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில் ஈரானில் 200 இலக்​கு​கள் மீது தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவ கமாண்​டர் அட்​மிரல் பிராட் கூபர் , பாதுகாப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத் ஆகியோர் புளோரி​டா​வில் நேற்று அளித்த பேட்​டி​யில், ஈரான் கடற்​படையை ஒட்டு மொத்​த​மாக அழிக்​கும் நடவடிக்​கை​யில் அமெரிக்க படைகள் ஈடு​பட்​டுள்​ளன. ஈரானின்மிகப் பெரிய ட்ரோன் ஏவும் போர்க்​கப்​பலை நேற்று தகர்த்​தோம். […]

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ரொட்டவெவ, கல்ஓய சந்தி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த முதியவரின் சகோதரியை, அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி வந்துள்ளார். இது குறித்து அறிந்த முதியவர், தனது சகோதரியைக் காப்பாற்றுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது, கோபமடைந்த சகோதரியின் […]

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர் காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு அவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 39 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் இருவரும் ரஷ்ய நாட்டு பிரஜைகள் எனவும் தெரியவந்துள்ளது.

கோடாவுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (06) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கட்டுநாயக்க பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 945 லீற்றர் கோடாவும், மற்றுமொரு சந்தேகநபரிடமிருந்து 1890 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் […]

அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளை தொடர்ந்து, ஏற்கனவே துப்பாக்கிதாரிகள் இருவர் உட்பட 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அதேநேரம், நேற்று […]

பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். […]

நிபந்தனையற்ற சரணாகதி தவிர ஈரானுக்கு வழியில்லை – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதற்குப் பிறகு, சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கத் தலைவர்(கள்) தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்களும் எங்களது அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் இணைந்து, ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம். இதன் மூலம் ஈரானைப் […]

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் நாடு கடத்த வேண்டாமென இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக றொய்ட்டர்ஸால் வெள்ளிக்கிழமை (06) பார்வையிடப்பட்ட உள்ளக இராஜாங்கத் திணைக்களத்தின் கேபிள் வெளிப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (06 திகதியிடப்பட்ட கேபிளில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்துக்கு பொறுப்பான ஜேய்ன் ஹொவெல், பூஷெர் கப்பலின் மாலுமிகளோ அல்லது டெனாவில் உயிர் தப்பிய 32 பேரோ ஈரானுக்கு நாடுகடத்தப்படக்கூடாதென […]

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சியினருக்குச் சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றம் நேற்று( 06.03.2026 ) முற்பகல் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய வேளையில், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் மேலும் தெரிவிக்கையில், அடக்குமுறை, அடக்குமுறை என்று வெறும் வார்த்தைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்காமல், உண்மையில் எங்கே அடக்குமுறை நடந்தது என்பதை எங்களிடம் முன்வையுங்கள். […]