8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின் டிரேட்டன் சந்தியில் நேற்று (03) மாலை 5.00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். “10 கிலோ கொழுந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில்லை”, “ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்”, “10 கிலோவுக்கு 6 கிலோ கழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்”, “வேலை நேரம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட […]
மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். தற்போது நிலவும் மத்திய கிழக்கு மோதல்களால் உக்ரைனின் நட்பு நாடுகளின் கவனம் திசைதிரும்பும் அபாயம் உள்ளதாகவும், இது ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்ரைனைப் பாதுகாப்பதை மறக்கச் செய்யக்கூடும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இத்தாலிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி, தனது நாட்டின் வான்பரப்பைப் பாதுகாப்பதற்கான ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களைப் […]
ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் நடப்புக் கணக்கைப் பொறுத்தமட்டில், 2025 ஜனவரியில் 100 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், 2026 ஜனவரியில் சுமார் 370 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான முதுகலை பட்டப்படிப்பு பீடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டுடன் […]
ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் தொழில்துறை திறனை மேம்படுத்துவதற்கு இலங்கை பட்டய ஊடக வல்லுநர் நிறுவனம் என்ற பெயரில் நிறுவனமொன்றை நிறுவுவதற்கு இலங்கை ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்படுகிறது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற […]
சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் என்பதுடன், இவ்விடயத்தில் ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் விசேடமாகக் கவனத்திற்கொள்ளப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை […]
அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் அச்சமூட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார் கரிசனைகளை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக், இக்கரிசனைகள் தொடர்பில் இன்று புதன்கிழமை (4) அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (3) மு.ப […]
இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளதுடன், கவலையடைந்துள்ளார்கள். தலைகுனிந்துள்ளார்கள். பாராளுமன்றத்தில் கூட கண்டனத்தை வெளியிடாதது அவமானத்துக்குரியது. டொனால்ட் ட்ரம்ப் பெரிய சைத்தான், இஸ்ரேலில் உள்ளவர் குட்டி சைத்தான் இவர்களே உலக அமைதிக்கு இன்று அச்சுறுத்தலாக செயற்படுகிறார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அந்நிய […]
உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாளை வியாழக்கிழமை (5) காலை நடைபெற உள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மோதலை எதிர்கொண்டு, வளைகுடா பிராந்தியத்தில் எரிசக்தி அமைப்புகள், மின் கட்டங்கள் மற்றும் உப்புநீக்கும் நிலையங்கள் போன்ற மிகவும் உணர்திறன் வாய்ந்த உள்கட்டமைப்புகள் மீதான சாத்தியமான தாக்குதல்கள் குறித்து அந்த […]
டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆவார். ஆஸ்டினில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இந்திய-அமெரிக்க மாணவி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 53 வயதான நிடியாகா டியாக்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார். […]