இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச் செய்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இடைக்கால நிர்வாகத்தை சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதிக்காத்தென்ற நிலையில அவர்களுடன் கதைத்து தேவையான மாற்றங்களைச் செய்ய இரண்டாண்டுகளைப் பெற்றதாகவும் ஆனால் தயாசிறி ஜயசேகர விளையாட்டமைச்சராக வந்து அனைத்தையும் மாற்றியதாகவும் நவீன் சமூகவலைத்தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். அந்நேரத்தில் அரசியல் சூழல் காரணமாக நிஷாந்தவுக்கு ஆதரவளிக்கவில்லை நவீன் மேலும் […]
முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காலி வீதியில், கருச சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கி அமைந்துள்ள வீரபுரன் அப்பு வித்தியாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திற்கு அடியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மொரட்டுமுல்லை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். […]
பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய (04) பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகரால் குறித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் வெளிவாரியான விசாரணையை நடத்துவதற்கு 2025.07.25 அன்று பாராளுமன்ற பதவிநிலை ஆலோசனைக் குழு தீர்மானித்திருந்தது. அந்தத் தீர்மானத்திற்கு அமைய, ஓய்வுபெற்ற […]
ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!
800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த இருவரும் அதிகளவான டீசலை அதிக விலையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 800 லிட்டர் டீசல், டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கொள்கலன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் […]
களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன், இதனால் மின்மாற்றியின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் லெகோ (LECO) ஊழியர்களும் வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கையளித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான […]
தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, இன்று (04) காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபா வரை குறைந்துள்ளது. நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாகக் காணப்பட்டது. இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 407,000 ரூபா […]
காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி கடற்பரப்பிலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர், அவர்களில் 30 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு, 10 இலட்சம் தொழிலாளர்களின் பாதுகாப்பு மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பணிபுரிந்து வரும் சுமார் பத்து […]
வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனுமதி பத்திரமன்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர். மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவே இவ்வாறு கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.