ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய எல்.ஆர். கிம்ஹானி பெரேரா என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் குழுத் தலைவியாக (Team Leader) பணியாற்றி வந்துள்ளார். இந்த கொலையை செய்ததாக சந்தேகப்படும் , அதே தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றிய திருமணமான ஊழியர், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளார். பதுளை, […]
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட நிபுணர் வைத்தியர் எஸ்.டி.யு.எம். ரங்க இது குறித்து தெரிவிக்கையில், “இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 7 பேர் நடுத்தர அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஏனையோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் காயமடைந்தவர்கள் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் […]
இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, வொல்வ்ஸ் சார்பாக றொட்றிகோ கோமெஸ், அன்ட்ரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 59 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி உள்ளது. மன்செஸ்டர் யுனைட்டெட், அஸ்தன் வில்லா ஆகியன தலா […]
இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச் செய்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இடைக்கால நிர்வாகத்தை சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதிக்காத்தென்ற நிலையில அவர்களுடன் கதைத்து தேவையான மாற்றங்களைச் செய்ய இரண்டாண்டுகளைப் பெற்றதாகவும் ஆனால் தயாசிறி ஜயசேகர விளையாட்டமைச்சராக வந்து அனைத்தையும் மாற்றியதாகவும் நவீன் சமூகவலைத்தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். அந்நேரத்தில் அரசியல் சூழல் காரணமாக நிஷாந்தவுக்கு ஆதரவளிக்கவில்லை நவீன் மேலும் […]
முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காலி வீதியில், கருச சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கி அமைந்துள்ள வீரபுரன் அப்பு வித்தியாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திற்கு அடியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மொரட்டுமுல்லை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். […]
பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய (04) பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகரால் குறித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் வெளிவாரியான விசாரணையை நடத்துவதற்கு 2025.07.25 அன்று பாராளுமன்ற பதவிநிலை ஆலோசனைக் குழு தீர்மானித்திருந்தது. அந்தத் தீர்மானத்திற்கு அமைய, ஓய்வுபெற்ற […]
ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!
800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த இருவரும் அதிகளவான டீசலை அதிக விலையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 800 லிட்டர் டீசல், டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கொள்கலன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் […]
களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன், இதனால் மின்மாற்றியின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் லெகோ (LECO) ஊழியர்களும் வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கையளித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான […]
தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, இன்று (04) காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபா வரை குறைந்துள்ளது. நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாகக் காணப்பட்டது. இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 407,000 ரூபா […]