மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றாடல் அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்ட போதிலும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாமை குறித்துக் கவலை வெளியிடப்பட்டது. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற […]
தேசிய செயற்பாட்டில் மகாவலி இளைஞர் படையணியை இணைத்துக்கொள்வது குறித்த கலந்துரையாடல்

போதைப்பொருள் தடுப்பு – மகாவலி இளைஞர் படையணி 2026 ஐ நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுக் குழுவின் செயலாளரும், ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அதன்படி, மகாவலி இளைஞர் படையணியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி பெற்ற 600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டில் இணைத்துக்கொள்வதற்கு […]
இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நன்மை; ரணில் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கை மற்றும் இந்தியாவுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் அவதானம் செலுத்தியுள்ளனர். உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று புதன்கிழமை கொழும்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ‘இலங்கையின் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார நிலப்பரப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. […]
தரம் குறைவான நிலக்கரி; 2200 மில்லியன் நஷ்டத்துக்கு 392 மில்லியன் மாத்திரமே தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது!

இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைவான நிலக்கரியால் 2200 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்டப்பணமாக 392 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நஷ்டத்தையே மின் கட்டணத்தின் ஊடாக மக்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றஞ்சுமத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி 5900 – 6150 கிலோ […]
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை; 44,806 சந்தேகநபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 44,806 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார். பத்தரமுல்லை பகுதியில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் […]
இலங்கையை வென்ற நியூசிலாந்து

உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று (25) இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இலங்கை அணியை பொருத்தவரையில் இன்று ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய கமில் மிஷாரவுக்கு பதிலாக சரித் அசலங்க இன்றைய போட்டியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். இந்நிலையில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து […]
இன்றுடன் நிறைவு பெறுகிறது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. கடந்த காலங்களிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், பரீட்சை முடிந்த பின்னர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் போக்கு காணப்பட்டதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பெற்றோர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானம் […]