‘கொடுத்தால் பெறலாம்’; பிரம்டன் மாநகரில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

கனடா பிரம்டன் மாநகர முகநூல் பகக்த்தில் மகளிர் தினக் கொண்டாட்டம் குறித்த செய்தி வெளியிடப்படுள்ளது. சர்வதேச மகளிர் தினம் என்பது நமது நகரத்தை வடிவமைத்து முன்னேற்றி வரும் பெண்களை கௌரவிக்கும் தருணமும், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஊக்கமாகவும் விளங்குகிறது. இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருள் ‘கொடுத்தால் பெறலாம்’ (“Give to Gain” ) என்பதாகும். வழிகாட்டுதல், ஒத்துழைப்பு மற்றும் சமூக ஆதரவு ஆகியவை எவ்வாறு வாய்ப்புகளை உருவாக்கி பாலின சமத்துவத்தை முன்னேற்றுகின்றன என்பதை இது வலியுறுத்துகிறது. மாலை […]

நாளை விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்

விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தன்னாவுக்கு நாளை காலை மற்றும் மாலை என்று இரண்டு முறை திருமணம் நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வேறு வேறு மாநிலங்களை சேர்ந்த விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகாவும் நாளை இரண்டு முறை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜய் தேவரகொண்டாவுக்கும், கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தை சேர்ந்த ரஷ்மிகா மந்தன்னாவுக்கும் நாளை திருமணம் நடக்கவிருக்கிறது. நாளை காலை விஜய் தேவரகொண்டா குடும்ப வழக்கப்படி திருமணம் நடக்கிறதாம். அதாவது […]

மார்ச்சில் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா?

பல ஆண்டுகளாக நடந்து வரும் நடிகர் சங்க கட்டிட வேலை முடிந்து அடுத்த மாதம் திறப்பு விழா நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார் விஷால். இதையடுத்து மீண்டும் அவரின் திருமண பேச்சு கிளம்பிவிட்டது. நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த கட்டிடத்தை கட்டி முடித்து திறப்பு விழா நடத்தி அதில் நடக்கும் முதல் கல்யாணம் என் கல்யாணம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார் விஷால். ஆனால் கட்டிட வேலை முடிவதற்குள் விஷால் […]

ஏப்ரலில் தலைவர் 173 படப்பிடிப்பு

லைவர் 173 படம் பற்றி தாய் கிழவி விழாவில் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. அந்த பக்கம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் செய்து வரும் வேலை ரஜினி ரசிகர்களை பரம திருப்தி அடைய வைத்திருக்கிறது. தலைவர் 173 அப்டேட்: ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் தலைவர் 173. அந்த படத்தை டான் படம் புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்க, கமல் ஹாசன் தயாரிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் […]

உயிரிழந்த பெண்ணின் கருப்பையைத் தானமாகப் பெற்று பிரித்தானியாவில் முதல் குழந்தை பிறப்பு

மருத்துவத் துறையில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், உயிரிழந்தபெண்ணிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பொருத்தி, அதன் மூலம் பிரித்தானியாவில் முதல் முறையாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. லண்டனில் உள்ள குயீன் சார்லோட்ஸ் மற்றும் செல்சியா வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. இந்த குழந்தை 3.1 கிலோ கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. குழந்தையின் தாயான 30 வயதுடைய கிரேஸ் பெல், பிறப்பிலேயே ‘MRKH’ எனும் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் தள்ளிப்போகிறதா?

2026 சட்டமன்ற தேர்தல் தேதி வருகிற மார்ச் 1 வாரத்தில் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்ட மன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த ஓராண்டாகவே தேர்தலுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் தேதி தற்போது தள்ளிபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, […]

விஜய் யாருக்காக கட்சி துவங்கினார் – திருமா

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்து வருகிறது திமுக. இதனிடையில் இன்னமும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அழைப்பு வரவில்லை. இந்நிலையில் இதுக்குறித்து பேசியுள்ள திருமாவளவன் எம்பி, விஜய் பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் சந்திப்பில் பேசிய விஜய், எப்போதும் போல் திமுக, தவெக இடையில் தான் போட்டி என தெரிவித்தார். அத்துடன் திமுகவை கடுமையாக விமர்சித்தவர், அறிவாலயத்தில் நிழலுக்கு ஒதுங்குபவர்களை எல்லாம் வைத்து […]

முதுபெரும் அரசியல் தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு காலமானார்!

முதுபெரும் அரசியல் தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101. ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர். வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் […]

புதிய பயண விதியை அமுல்படுத்தியது பிரித்தானியா!

பிரித்தானியாவுக்கு விசா இன்றி பயணம் செய்யும் வசதி கொண்ட சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இன்று புதன்கிழமை (25) முதல் தங்களது பயணத்திற்கு முன்னதாக இலத்திரனியல் பயண அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த நடைமுறை சில நாடுகளுக்கு மட்டும் அமுலில் இருந்தது. ஆனால் இன்றையதினம் முதல், விசா தேவையில்லாத நாடுகளைச் சேர்ந்த அனைத்துப் பயணிகளும் இதனைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த […]

பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை

இந்திய கடற்படையின் “நட்புப் பாலங்கள்” (Bridges of Friendship) திட்டத்தின் தொடர்ச்சியாக, பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி (INS Tarangini ) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறது. இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பலான INS Tarangini, 2026 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திலும் […]