தம்புள்ளையில் விபத்து : திருமணமாகி 3 மாதங்களிலேயே உயிரிழந்த இளம் தம்பதியினர்

தம்புள்ளை – யாபாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் திருமணமாகி மூன்று மாதங்களையே சந்தித்த இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு: தம்புள்ளை, யாபாகம பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும், அவரது மனைவியான 22 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். திருமணத்தின் பின்னர் கம்பஹா பகுதியில் உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த இவர்கள், அங்கேயே வாடகை வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர். விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டு, […]
மூன்று தமிழ்க் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைக்க தீர்மானம்?
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு இன்று (24) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர் இரங்கநாதனுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன், பிரதேசசபை […]
பொதுமக்கள் இராணுவ உணவகங்களில் வியாபாரம் செய்ய தடை

இராணுவத்தினரின் உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்ய முற்றாக தடை செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் 10 வது அமர்வு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது இந்த அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார உறுப்பினர் குறிஞ்சி குமரன், பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட இராணுவ உணவகங்களில் பொது மக்களுக்கு வியாபாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்ட வேண்டும் என ஒரு பிரேரணையை கொண்டு […]
200 ரூபா கொடுப்பனவுக்குச் சட்ட அங்கீகாரம் அவசியம்!
தோட்டத் தொழிலாளர்களின் 200 ரூபா கொடுப்பனவுக்குச் சட்ட அங்கீகாரம் அவசியம்! அரசாங்கத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபா நாளாந்த வரவுக் கொடுப்பனவுக்குச் சட்டப்பூர்வமான பின்னணியை உருவாக்குமாறு அரச நிதிப் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரச நிதிப் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது விடயங்களை விரிவாக விளக்கிய குழுவின் தலைவர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்குக் குழு எவ்வித […]
போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை” நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தைப் “போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக” பிரகடனப்படுத்த “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைப் பேரவை தீர்மானித்துள்ளது. இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டண திருத்தம்

2026ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் 2026 மார்ச் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்த முன்மொழிவை மீளாய்வு செய்ததன் பின்னர் தயாரிக்கப்பட்ட ஆலோசனைப் பத்திரத்தை http://www.pucsl.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிட முடியும். அதற்கமைய, உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான எழுத்துமூல […]
சிவனொளிபாத மலை யாத்திரீகர்கள் பயணித்த கார் விபத்து

அளுத்கம பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குழுவினர் பயணித்த கார் நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் ரக்காடு கிராம பகுதியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (24) அன்று வேக கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் காரில் பயணம் செய்த மூவருக்கு காயங்கள் ஏற்படவில்லை என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி […]
சிங்கபுர பகுதி அரிசி ஆலையில் தீ பரவல்

ரபல அரிசி வர்த்தகர் மித்ரபால லங்கேஷ்வரவுக்கு சொந்தமான, வெலிகந்த – சிங்கபுர பகுதியில் அமைந்துள்ள அரிசி ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (24) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரிசி உமி சேகரிக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அரிசி ஆலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக மித்ரபால லங்கேஷ்வரவிடம் தொலைபேசி ஊடாக வினவியபோது, சிறிய […]
விசா நிபந்தனைகளை மீறி பிரமிட் மோசடி ; 16 சீனர்கள் கைது

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணைய வழி ஊடாக சட்டவிரோதமான முறையில் (பிரமிட் முறை) பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து மடிக்கணினிகள் (Laptops) 23, கைத்தொலைபேசிகள் 11, திசைவிகள் (Routers) 7, குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் 9 மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் 3,280 கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு 05, ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரோலிஸ் வீதி ஆகிய இடங்களில் சில […]
இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் திருக்கேதீஸ்வரம் விஜயம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்று (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு வருகை தந்தார். மன்னார், தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்தனர். சுவாமி கைலாசநந்த்கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து […]