கடந்த ஆண்டில் 2025 இல் 110 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
கடந்த 2025 ஆம் ஆண்டில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் மூலம் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 110 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையே 147 […]
பிரேமதாச மைதானத்தில் உலகக் கிண்ண சூப்பர் 8 ஆரம்பம்!

இலங்கையின் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (21) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. குரூப் 2-வில் நடைபெறும் இத்தொடரின் 41-வது போட்டியான இதில், நாணய சுழற்சி வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார். அதன்படி, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசவுள்ளது. முதல் சுற்றில் இரு […]
இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

ந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாம்பல் நிற கார் ஒன்றில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் […]
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு சிறந்த குடிமகனுக்கான விருது

அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனர் மோசஸ் வேதமுத்து, பரமட்டா 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் (Citizen of the Year) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரமட்டா மற்றும் மேற்கு சிட்னி பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது சேவையை பாராட்டி, ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழா பரமட்டா டவுன் […]
சுந்தர் பிச்சை வெளியிட்ட முக்கிய தகவல்கள்

டெல்லியில் இடம்பெறும் ஏஐ (Artificial Intelligence) மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சுந்தர் பிச்சை பேசும் போது தெரிவித்ததாவது, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் ஏஐ மையம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஏராளமானோர் தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய ஏஐ தொழில் நுட்பங்கள் […]
நைஜீரியாவில் துப்பாக்கி சூடு ; பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான ஸம்பாராவில் (Zamfara) உள்ள கிராமம் ஒன்றின் மீது இரவு வேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் துப்பாக்கி சூடு ஸம்பாராவின் புக்கூயும் (Bukkuyum) பகுதியில் உள்ள தங்கன் துட்ஷா (Tungan Dutse) கிராமத்தில் வியாழக்கிழமை (12) இரவு முதல் வெள்ளிக்கிழமை (13) காலை வரை நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய நபர்கள், அப்பகுதியிலுள்ள கட்டிடங்களுக்குத் தீ […]
அல்பெர்டா மக்களின் குடியேற்றமே வாக்குச்சீட்டில் ஆதிக்கம் செலுத்தவுள்ளது!

அல்பெர்டா மாகாணத்தின் முதல்வர் டானியல் ஸ்மித்(Danielle Smith) தனது அரசு 2050ஆம் ஆண்டுக்குள் மாகாண மக்கள்தொகையை 1 கோடியாக (10 மில்லியன்) இரட்டிப்பாக்கும் இலக்கை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது என்று அறிவித்தது. மேலும், 2024ஆம் ஆண்டில் பல முறை, 1,06,000 மக்கள் வசிக்கும் ரெட் டீர்(Red Deer) நகரம் 10 இலட்சம் மக்கள்தொகையுடன் விரிவடைய வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். குடியேற்றம் குறித்த பொதுமக்களின் மனநிலையும் மாறியுள்ளது. கனடா முழுவதும், சமீப ஆண்டுகளில் குடியேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது […]
டொரோண்டோவில் ஊழல் குற்றவாளியான காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடு விற்பனை?

டொரோண்டோவில் இடம்பெற்ற ஊழல் குற்றவாளியான காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி வீடும் ஊழல் மோசடி வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 56 வயதான கான்ஸ்டபிள் திமோத்தி பார்ன்ஹார்டுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில், காவல் துறை சீருடைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தமை, சட்டவிரோத கஞ்சா விற்பனை நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக லஞ்சம் பெற்றமை, குற்றவாளிகளுக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டு துப்பாக்கிச் சூடுகளை ஏற்படுத்த உதவியது போன்றவை அடங்கும் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிசார் […]
பொலன்னறுவை – புனித தலத்திற்கான வீதி நீரில் மூழ்கியது!

பொலன்னறுவை – சோமாவதிய, சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 9.15 நிலவரப்படி, சுங்காவிலவிலிருந்து சோமாவதிய புனித தலத்திற்குச் செல்லும் வீதியில் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளது. இதனால், குறித்த வீதியினூடாக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் – பிரதி வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ரே ப்ராஞ்சே (Marc-André Franche), வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில், பிரதி வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை (Arun Hemachandra) மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறிப்பாக, நிலையான வளர்ச்சி முன்னுரிமைகள், பொருளாதார […]