யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அவசர கோரிக்கை

யாழ். மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் தொடர்புடைய கட்டுமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த திட்டத்தில் கட்டாய சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்று வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 1980ஆம் ஆண்டு 47ஆம் எண் தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் இல்லாத போதிலும், குறித்த கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக WNPS வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. […]

இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எங்கே? பருத்தித்துறையில் ஆர்ப்பாட்டம்!

இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று (21) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாமில் வைத்து 15.02.2007 அன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதன் 19 ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி […]

15 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி!

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் வட்டவளைப் பகுதியில் சுமார் 15 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது, லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் லொறி கடுமையாகச் சேதமடைந்ததுடன், அதன் ஓட்டுநர் வாகனத்தினுள்ளேயே சிக்கிக்கொண்டார். அவரை மீட்பதற்காக வட்டவளை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து […]

திமுக – காங்கிரஸ் கூட்டணி கை கொடுக்குமா? காலை வாருமா காங்கிரஸ்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகப் போட்டியிட்டு வென்று கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று குரல் எழுப்பினர். இதனால், உறுதியாக இருப்பதாகக் கருதப்பட்ட திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும், இதுபற்றித் […]

உயிரே போனாலும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம்

உயிரே போனாலும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மதுரை உத்தங்குடியில் இன்று (பிப். 21) நடைபெறும் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பி. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத் தொகையை மத்திய அரசு […]

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் காரைக்குடியில் அறிமுகம்!

திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாட்டில் பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பிரசாரம், மக்கள் சந்திப்புக் கூட்டம், மாநாடு எனத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப். 21) ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ நடைபெற்று வருகிறது. […]

ரஜினி – கமல்; 47 ஆண்டுகளுக்குப் பின் இணைவு

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், அதன் புரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. 47 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் மீண்டும் ரஜினியும் கமலும் ஒன்றாக நடிக்க இருக்கிறார்கள். அப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியாக இது அமைந்திருப்பதால், அப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை அனிருத் ஏற்றிருக்கிறார். இந்த படத்திற்காக […]

பௌத்த மதத்தையோ மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமையில்லை

பௌத்த மதத்தையோ அல்லது எந்தவொரு மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டின் விகாரைக் கட்டமைப்புகள் தற்போது போதிய கவனமின்றி சிதைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி பௌத்த மதத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்காக ரணசிங்க பிரேமதாச புத்தசாசன அமைச்சு மற்றும் நிதியத்தை உருவாக்கினார். அதன் மூலம் ஏனைய மதங்களுக்கான அமைச்சுக்களையும் ஏற்படுத்தி அந்தந்த மதக் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதன் ஊடாக நாட்டின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் உறுதிப்படுத்தப்பட்டது என்று […]

மருமகனைக் கத்தியால் குத்திய மாமனார்

தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார். நேற்று (20) மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, மாமனார் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் மருமகனைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மருமகன், பிரதேசவாசிகளால் தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும், அவரது மனைவி தற்போது தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கைது செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமீபத்தில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 47 மீனவர்களும் அவர்களது 6 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது […]