சமூக ஊடக தடை; பிரித்தானியா இந்த வருடமே அறிமுகப்படுத்தக்கூடும்?

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் சட்டத்தை பிரித்தானியா இந்த வருடமே அறிமுகப்படுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அபாயங்களுக்கு விரைவாக பதிலளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிரித்தானிய பிரதமர் Keir Starmer தலைமையிலான அரசு, இந்தத் தடை குறித்து பொதுமக்கள் கருத்துக் கணிப்பு செயல்முறையை தொடங்கியுள்ளது. புதிய விதிமுறைகளை சில மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை செய்யவும் அரசு செயல்பட்டு […]

நாடளாவிய ரீதியில் ஆசிரிய ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் திருத்தம்

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் 5 ஆம் திகதி என நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரம் […]

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா விஜயம்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மும்பையில் உள்ள லோக் பவனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பிரான்ஸ் தூதுக்குழுவினரும் இந்திய தரப்பில் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர், கர்நாடகாவின் வேமகலில் டாடா ஏர்பஸ் தொழிற்சாலையில் எச்125 என்ற எடை குறைந்த ஹெலிக்கொப்டர் தயாரிப்பை கூட்டாக தொடங்கிவைத்தனர். பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எனது அன்பு நண்பர் […]

டில்லியில் இன்று முக்கிய சந்திப்புகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்புக்கு இணங்க, AI Impact Summit 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்தநாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், மாநாட்டுக்கு வருகைதந்துள்ள ஏனைய நாட்டுத் தலைவர்களுடனும், முக்கிய கலந்துரையாடல்களில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘AI Impact Summit 2026’ மாநாடு புதுடில்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், […]

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்றே கூறவேண்டும் – முபாற‌க் முப்தி

மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கிறார்கள் என ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்துள்ளார். ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேச்சாள‌ர் மாநாடு நேற்று(17.02.2026) சாய்ந்த‌ம‌ருது க‌லாசார‌ ம‌ண்ட‌ப‌த்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2017 ஆண்டு […]

1983 – 2009 மோதல்கள்சார் பாலியல் வன்முறைகள் குறித்த அறிக்கையைக் கேட்கும் ஐ.நா: அரசின் நிலைப்பாடு என்ன?

இலங்கையில் 1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட விசேட அறிக்கை தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(17) நடைபெற்ற ‘நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, “ஐக்கிய நாடுகள் […]

வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கம்?

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மீதான பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (17) உத்தரவிட்டார். பயணத் தடையை நீக்க கூடுதல் தனிப்பட்ட பிணையை விதிக்கவும் நீதவான் உத்தரவிட்டார். இதன்படி, பெப்ரவரி 28ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரான அமைச்சரின் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸவின் கோரிக்கையைத் […]

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்திற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை […]

இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு அனுமதி இலவசம்

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டி இன்று (18) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய மைதானத்தின் 5 மற்றும் 7 ஆம் இலக்க வாயில்கள் ஊடாகப் பொதுமக்கள் நுழைந்து போட்டியை இலவசமாகப் பார்வையிடமுடியும். SSC மைதானத்தின் நுழைவாயில்கள் 1:00 மணிக்கு திறக்கப்படும், போட்டி பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி […]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி […]