கோகா-கோலா கனடா போட்டிலிங் நிறுவனத்தின் முதலீட்டை வரவேற்பு!

பிராம்ப்டன் — ஒன்டாரியோ அரசு, கோகா-கோலா கனடா போட்டிலிங் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் 141 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான முதலீட்டை வரவேற்கிறது. இம்முதலீடு, பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி, விநியோக மற்றும் விற்பனை மையத்தைப் புதுப்பித்து விரிவாக்குவதற்காக செய்யப்படுகிறது. இவ்விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது 20 மில்லியன் கூடுதல் கேஸ்களை உற்பத்தி செய்யக்கூடிய நவீன தொழில்நுட்ப உற்பத்தி வரிசை நிறுவப்படும். கட்டுமான காலத்தில் 500 வரை உயர்ந்த ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

இன்று மீண்டும் சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் முன்னிலையாகிறார்!

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 11ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. இதன்போது, அவரது பிணை கோரிக்கை தொடர்பான கட்டளை […]

பங்களாதேஷ் புதிய பிரதமர் – நளிந்த ஜயதிஸ்ஸ விசேட சந்திப்பு

ங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (17) மாலை அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்களாதேஷின் புதிய பிரதமருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த டித்வா புயலின் போது பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், பங்களாதேஷின் சுற்றுலாப் பயணிகளை […]

உலகின் பல்வேறு பகுதிகளில் திடீரென முடங்கிய யூடியூப்

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (18) திடீரென முடங்கியது. டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 இலட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை பார்வையிடுவதிலும் சிக்கல்களைச் சந்திப்பதாகப் முறைப்பாடு அளித்துள்ளனர். குறிப்பாக வட்ஸ்அப் போன்ற தளங்களில் வீடியோ லிங்குகள் சரியாக தொழிற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் கூகுள் நிறுவனம் சேவைகளைச் சீரமைக்கும் […]

விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் போது தொலைபேசி பாவனை!

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்திற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த […]

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். மு.ப. 11.30 – பி.ப. 5.00 (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் […]

சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் வலி. வடக்கு மக்கள்

சித்தரை புத்தாண்டு தினத்தன்று பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்தனர். இந்தநிலையில் , அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு […]

மன்னார் ஓலைத்தொடுவாயில் சட்டவிரோத மீன்பிடி!

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட சுமார் 450 கிலோ மீன் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன், வாகனம் ஒன்றும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த […]

கஞ்சா பயிரிட்டதாக ஒருவர் கைது

எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல பகுதியில், காணியொன்றில் பயிரிடப்பட்டிருந்த 18 கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எத்திமலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் எத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்

சட்டதரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் ஒரு பாரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எந்தவொரு அரசாங்கத்தினதும் அடிப்படைப் பொறுப்பாகும். ஒவ்வொரு வல்லுநர்களும் தங்கள் சேவைகளை சுதந்திரமாகவும் சுதந்திரமாகவும், மிரட்டல் அல்லது அச்சுறுத்தல்கள் இல்லாமல் வழங்க உரிமை உண்டு […]