விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் போது தொலைபேசி பாவனை!

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்திற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய மீட்டல் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து அல்லது அரச பேருந்துகளாக இருப்பினும், பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறிச் செயல்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாகச் செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் அதனை ஒளிப்படம் அல்லது காணொளியாக எடுத்து 0719090900 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும்.

அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chemmany15

செம்மணி மனிதப் புதைகுழி குறித்த தொல்பொருள் அறிக்கை: தமிழ் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு, சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை

October 23, 2026

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அங்கு தோண்டி எடுக்கப்பட்ட

trump carney 1

அமெரிக்கத் தேர்தலில் கனடா தலையிடுவதாகக் குற்றம் சாட்டும் அமெரிக்க அதிகாரிகளுக்கு மத்தியில், வர்த்தகம் குறித்துப் பிரதமர் கார்னியும் டிரம்பும் கலந்துரையாடல்

October 23, 2026

எல்லை தாண்டிய வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் புதன்கிழமை காலை தான் தொடர்பில் இருந்ததாகக் கனடியப் பிரதமர்

saudhi airport att

தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் சவுதி அரேபியாவிற்கான பயண எச்சரிக்கையைப் புதுப்பித்த கனடா

October 23, 2026

சவுதி அரேபியாவின் தலைநகர விமான நிலையம் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு

lit

அடுத்த 3 நாட்களில் 350,000 லிட்ரோ சிலிண்டர்கள் விநியோகம்!

October 23, 2026

அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

jail

பாலியல் தொல்லை குற்றச்சாட்டு: NPP பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

October 23, 2026

இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை

har

தாய்வானில் சாம்பி சூறாவளி நெருங்குவதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!

October 23, 2026

சக்திவாய்ந்த சாம்பி சூறாவளி தாய்வானை நெருங்கி வருவதால், இன்று வெள்ளிக்கிழமை (23) கிட்டத்தட்ட முழுத் தாய்வானும் ஸ்தம்பித்துள்ளதுடன், பொதுமக்கள் வீட்டிலேயே

Chama

சாமர சம்பத் உள்ளிட்ட இருவர் மீண்டும் விளக்கமறியலில்!

October 23, 2026

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும்

Eng

இலங்கை இங்கிலாந்தை வென்றது!

October 23, 2026

பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் தற்போது முடிவுக்கு வந்த இங்கிலாந்துடனான போட்டியில் 429 ஓட்டங்களை

mah

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மஹிந்த நாமலுக்குக் கடிதம்

October 23, 2026

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்

ravikaran11

சைவ மக்களின் சமய மரியாதைக்கு நாட்டில் ஏற்பட்ட அவமதிப்புக்கள் – பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

October 23, 2026

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது

deng

டெங்கு அபாயம் – அடையாளம் காணப்பட்ட 32 சுகாதார அலுவலர் பிரிவுகள்

October 23, 2026

நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சுகாதார அலுவலர் பிரிவுகளைக் குறிவைத்து, ஒரு சிறப்பு நுளம்பு

mullai

முல்லைத்தீவில் சுமார் 7 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

October 23, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவில், பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 6.97 ஏக்கர் நிலம், பொதுப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக