விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது!

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 18) தெரிவித்தார். சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு – ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை விழா இன்று (பிப். 18) நடைபெற்றது. இதில், விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி […]
மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொகுதியின் தாக்கம் காரணமாக, குறித்த கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், மணிக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இதனால் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் நகர்வுகள் குறித்து […]
அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது
மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் கடான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, அந்தச் சந்தர்ப்பத்தில் மத்தல அதிவேக வீதி நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய இரு அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் தலைமையகத்திற்கும், ஏனைய இருவர் கொட்டாவை மற்றும் கடவத்தை […]
வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு நகரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பின் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை காணப்படுகின்றது. இதேநேரம் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடைகளை முன்னெடுத்த விவசாயிகள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர். இதேநேரம் […]
நாகர்கோவில் பகுதியில் மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

ணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கணவர், மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் தாக்கியுள்ளார். தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார், எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை […]
ட்ரம்பின் விசேட பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோரை இன்று (18) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்கு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக்கொலை : சகோதரர்களுக்கு விளக்கமறியல்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சகோதரர்கள் இருவரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இரு சந்தேகநபர்களும் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (18) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், நேற்று கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரபல நடிகை பியூமியின் மகன் உட்பட எழுவரின் விளக்கமறியல் நீடிப்பு
ராஜகிரிய, கலபலுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும், பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்க கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌஷல்ய புதன்கிழமை(18) உத்தரவிட்டார். சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்கள் முகத்தை மூடிய நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட சாட்சியாளர் (முச்சக்கர வண்டி சாரதி) சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அடையாள […]
இரண்டு பேருந்துகள் மோதி விபத்து : 25 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை – மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் இன்று இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸார், அவர்களில் இருவர் பெண்கள் என தெரிவித்தனர். தெஹியத்தக்கண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் […]
நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை […]