இருதய நோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளால் 7 மாதக் குழந்தை உயிரிழப்பு!

யாழில் ஏழு மாதப் பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.2.2026)இடம்பெற்றுள்ளது. இருதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான நோய் பாதிப்பு காரணமாக இந்தக்குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் – நுணாவில் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்தக் குழந்தை பிறந்தது முதல் இருதய நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. எனினும், மேலதிக சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் […]

கிண்ணியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக் கோரி, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது இன்று (18.2.2026) காலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு தமக்கான நீதியைக் கோரி கோஷங்களை எழுப்பினர். கடந்த டித்வா புயல் அனர்த்தத்தின் போது ஈச்சந்தீவு கிராமத்தைச் சேர்ந்த […]

கலிபோர்னியாவில் பனிச்சரிவில் சிக்கி 9 பேர் மாயம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லேக் டாஹோ பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி ஒன்பது பேர் மாயமாகியுள்ளனர். ட்ரக்கி நகருக்கு அருகிலுள்ள காஸில் பீக் பகுதியில் நேற்று(17.2.2026)காலை இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 15 பேரைக் கொண்ட குழுவொன்று அங்கு பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களில் ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்; மீட்கப்பட்டவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாயமாகியுள்ள ஒன்பது பேரைத் தேடும் பணியில் 46க்கும் […]

ரேபிஸ் நோய் உடன் வைத்திய உதவியை நாடவும்

ரேபிஸ் நோயால் இதுவரை 14 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த நோயின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் எந்தவொரு விலங்கு கடித்தாலும் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவர் நிபுணர் டாக்டர் அதுல லியனபதிரன இது தொடர்பில் கூறுகையில், ரேபிஸ் என்பது 100 சதவீதம் ஆபத்தானது. ஆனால் முற்றிலும் தடுக்கக்கூடிய நோய். பூஜ்ஜிய இறப்புகளை அடைய 2030இற்கு முன்னர் இலங்கை ரேபிஸை […]

யாழ்.பழைய பூங்கா விவகாரம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் உள்ள எந்த கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கியமைக்கான ஆவணங்கள் தம்மிடம் இல்லை என்றும் அவை எதற்கும் வாடகை அறவிடப்படவிலை எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை எனவும் பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது என கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் வளாகத்தில் உள்ள […]

மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பாற்ற முயற்சித்தார் – சரத் பொன்சேகா தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை காப்பாற்றுவதற்கு தீட்டிய திட்டத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார். ஈழப்போரின் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் சரணடையும் விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் காணொளி ஒன்றை பொன்சேகா இன்று (18.02.2026) வெளியிட்டார். சரத் பொன்சேகா நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே […]

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை மே 5 ஆம் திகதி மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான நேற்று(17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​இறந்த சிறுமியின் சகோதரர், இரண்டாவது சாட்சி, நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர். இதன்போது, ​​சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சிய விசாரணை மே 5 ஆம் திகதிக்கு […]

20 நிபந்தனைகளுடன் வேலூரில் நடிகர் விஜய் பிரசாரம்

வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு காவல் துறை 20 நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23 நடைபெற உள்ளது. சேலத்தைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, காவல் துறையின் அனுமதி கோரி அக்கட்சியின் மாவட்ட செயலர் வேல்முருகன் தலைமையில் தவெக நிர்வாகிகள் கடந்த வாரம் மனு அளித்திருந்தனர். அதேசமயம், அகரம்சேரியில் […]

பிளிங்கிட் செயலியின் மூலம் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் விற்பனை?

பிளிங்கிட் செயலியின் மூலம் தடை செய்யப்பட்ட கத்திகள் விற்பனை செய்யப்படுவதால், அந்நிறுவனத்துக்கு எதிராக தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தில்லியில், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட 8 செ.மீ. நீளமும், 2.5 செ.மீ. அகலமும் கொண்ட மடக்கும் வகையிலான கத்திகளை இணையவழியில் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இணையவழி வணிக சேவைகளை வழங்கும் தளங்களில் சோதனைச் செய்ததில், அரசு விதிமுறைகளை மீறிய அளவுகளைக் கொண்ட கத்திகள் பிளிங்கிட் நிறுவனத்தின் செயலியில் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. […]

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பிரச்னையில்லை; சர்ச்சை கருத்துக்குக் கண்டனங்கள்!

நாட்டில் பிரதமர் மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் எந்தவித பிரச்னைகளையும் எதிர்கொள்ளவில்லை என அகில இந்திய சன்னி ஜமையாதுல் உலமா அமைப்பின் பொதுச் செயலாளர் கந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு பிப். 16 ஆம் தேதி பேட்டி அளிக்கும்போது, அவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். இது தொடர்பாக கேரள முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த தக்‌ஷின […]