வாழைச்சேனையில் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்

வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை(13) அன்று ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை சேர்மன் கனகரெத்தினம் வீதியை சேர்ந்த வேலும் மயிலும் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு […]

களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல்கலைக்கழக வீதியிலுள்ள நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக விடுதிகளை இரவு 10:00 மணிக்கு மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக அரசுக்கு நயன்தாரா நன்றி தெரிவிப்பு!

தங்களுக்கு ஒரே சமயத்தில் மூன்று தேசிய விருதுகள் கிடைத்த சந்தோஷத்தை புகைப்படங்களுடன் ஷேர் செய்திருக்கிறார் நயன்தாரா. மேலும் விருதுகள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர். தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை விருதுகள் வழங்கும் விழா நடந்தது. தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம் படத்திற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது. மேலும் நயன்தாரா, […]

ரூ.1.04 லட்சம் கோடியில் சவுதி – கத்தார் புல்லட் ரயில்!

உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் வளைகுடாவில் இரண்டு நாடுகளுக்கு இடையில் மிகப்பெரிய புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டம் இந்தியாவிற்கு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் புல்லட் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்கு முன்மாதிரியாக ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் திகழ்கின்றன. இந்தியாவிலும் முதல் புல்லட் ரயில் சேவையை மும்பை – அகமதாபாத் இடையில் 2029 டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சூரத் – […]

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதிலளிக்கவில்லை?

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் புதுச்சேரி வந்தடைந்தார். அவரிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு கே.சி வேணுகோபால் பதிலளிக்காமல் சென்றுவிட்டார் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை சென்னை வந்தடைந்த அவர் புதுச்சேரியில் நடைபெறும் பாதயாத்திரையில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அங்கு இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் கே.சி வேணுகோபால் ஆலோசனை நடத்துவார் என தெரிகின்றது. பிறகு சென்னைக்கு வந்து அங்கிருக்கும் […]

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20 வரை நடைபெறும்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20 வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026 – 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப். 17) தாக்கல் செய்து உரையாற்றினார். தொடர்ந்து 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து […]

மேல் மாகாண இலகு ரயில் திட்டத்திற்கு இன்னும் இணக்கப்பாடு ஏற்படவில்லை

இலங்கையின் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில், ஜெய்கா (JICA) நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏனைய திட்டங்களை முதலில் வெற்றிகரமாக முன்னெடுத்து, அவற்றின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்த பின்னரே அடுத்தகட்ட தீர்மானங்களை எடுப்பதாக ஜெய்கா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக […]

இலங்கையைப் பாதாள உலகக் குழுக்களின் கூடாரமாக மாற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது

இலங்கையைப் பாதாள உலகக் குழுக்களின் கூடாரமாக மாற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(16.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. ஏற்படுத்திய கிளர்ச்சிகள் மற்றும் 30 வருட கால எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தத்தின் போது கூட ஏற்படாத ஒரு பாரிய அச்சம் […]

அதிகளவு மக்கள் செல்வாக்கு – மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?

கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி, மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறேன். அரசாங்கத்திற்கு 65% மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கூட்டுறவு வாக்குகளை கருத்திற் […]

அரச நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான நிபுணர் குழு கூட்டம் 2026 இலங்கையில்!

அரச நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான பிம்ஸ்டெக் (BIMSTEC) நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை, 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்காகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (BIMSTEC) நிறுவப்பட்டுள்ளது. 7வது இந்து சமுத்திர உச்சிமாநாட்டிற்கு இணையாக 2024 பெப்ரவரி மாதம் […]