தமன பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதி விபதது: இருவர் பலி

ஹிங்குராணை – தமன பிரதான வீதியின் பெரனிகம வளைவில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தமன பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று, பிரிவு 04 ஐச் சேர்ந்த 22 வயதுடைய நவாஸ் முஹம்மது நிசார் மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 20 வயதுடைய முஸம்மில் ஸியாத் அஹமட் என்ற இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் பிரதேசவாசிகளினால் உடனடியாக தமன பிரதேச வைத்தியசாலையில் […]

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டம்

அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு, தற்போது 62 தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் இது ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டில் 8,027 நபர்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். அரச சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக்கும் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு இணங்க, e-BMD திட்டம் 2025 ஜனவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் […]

பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகள் மனித நுகர்வுக்கு விற்பனை ; மூவர் கைது

பல்வேறு காரணங்களால் பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை, மனித நுகர்வுக்காக விற்பனை செய்த வியாபார நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட ஆணமடுவ பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர், 75 கிலோகிராம் அசுத்தமான இறைச்சியுடன் மூவரை கைது செய்துள்ளனர். உயிரிழந்த கோழிகளை விலங்கு உணவுக்காக எடுத்துச் செல்வதாக கூறிவிட்டு, அவற்றை மனித நுகர்வுக்காக விற்பனை செய்து வந்த வர்த்தகர், விநியோகஸ்தர் மற்றும் இந்த மோசடியுடன் தொடர்புடைய மற்றொருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பை ஆணமடுவ பொதுச் சுகாதாரப் […]

கடல் வழியாக கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு எரிப்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து 144 புறாக்கள் கடல் மார்க்கமாக நெடுந்தீவுக்கு கடத்தி வரப்பட்டிருந்தன. வௌ்ளிக்கிழமை ((13) அன்று முதற்கட்டமாக 44 புறாக்களை குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, கடற்படையினர் மூவரைக் கைது செய்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் மறைத்து […]

கொலையுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மீட்பு

பண்டாரகம – ஹொரண வீதியின் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள வயல்வெளி ஒன்றிற்குப்பக்கத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட, சந்தேகத்திற்குரிய ‘FX’ ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (15) மீட்கப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தளனர். மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது கறுப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசம் (Helmet) ஒன்றும், அதற்கு அருகாமையில் தரையில் கறுப்பு நிற துணியால் தைக்கப்பட்ட புதிய ஜாக்கெட் ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும், மோட்டார் சைக்கிள் இருந்த இடத்திலிருந்து சில அடி […]

செயற்கைக்கோள் மூலம் மண் ஈரப்பத தரவுகள்: இஸ்ரோ

இந்திய நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து 12 நாள்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் தரவுகளை வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது. இந்திய நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து 12 நாள்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் தரவுகளை வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது. இஸ்ரோ-நாசா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான நிசாா் கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. புவியின் மேற்பரப்பு மாற்றங்கள், […]

அஸ்ஸாம் முதல்வா் முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை!

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (பிப்.16) விசாரிக்க உள்ளது. உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைப் பட்டியலின்படி, இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்க வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது. அஸ்ஸாம் மாநில பாஜக சாா்பில் கடந்த 7-ஆம் தேதி அதன் எக்ஸ் பக்கத்தில் இந்த விடியோ பதிவேற்றம் […]

நாளை வங்கக் கடலில் புயல் சின்னம்?

தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (பிப்.16) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (பிப்.16) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதி மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா கதையின் நாயகனாக – காதல் இளவரசனாக- நடித்திருக்கும் ‘இதயம் முரளி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வான் வான்’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ எனும் திரைப்படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ், எஸ். தமன், நிஹாரிகா, ரக்சன், டிராவிட் செல்வம், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர் உள்ளிட்ட […]

மீண்டும் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த் – மகேஷ் ராஜ் கூட்டணி

‘இயக்குநராகவும் , நடிகராகவும் வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் மீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த் – மகேஷ் ராஜ் பஸ்லியான்- நான் ஆகியோர் புதிய படத்தில் இணைய உள்ளோம்’ என நடிகரும் இயக்குநருமான அபிஷன் ஜீவந்த் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவந்த் – அனஸ்வரா ராஜன் ஜோடியாக நடித்த ‘வித் லவ்’ எனும் திரைப்படம் வெளியாகி, ரசிகர்களாலும் விமர்சவர்களாலும் பாராட்டப்பட்டு, வெற்றிகரமாக படமாளிகைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் ரசிகர்களுக்கும் […]