உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (12) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பொது நிர்வாக, மாகாண சபைகள் […]

“போதை இல்லாத நாடு – மகிழ்ச்சியான நாளை”

நச்சுப் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்திட்டத்தின் கீழ், மாத்தறை மாவட்ட செயல்பாட்டு சபையை நிறுவுவதற்கான விசேட கூட்டம் நேற்று (12) நடைபெற்றது. பொதுப்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல தலைமையில், மாத்தறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. “போதை இல்லாத நாடு – மகிழ்ச்சியான நாளை” என்ற எண்ணக்கருவுக்கு அமைய மாத்தறை மாவட்ட வேலைத்திட்டத்தின் ஊடாகப் பாதுகாப்புத் தரப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் […]

ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப துரித நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று (12) பாடசாலைகளுக்கு விஜயம் செய்ததன் பின்னர், பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவானது தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. எனினும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இந்நிலைமையில் மாற்றம் ஏற்படும். புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கியமான தரப்பினர் ஆசிரியர்களே ஆவர். பிள்ளைகளுக்குத் தரமான […]

இருபதுக்கு 20; இந்தியாஅபார வெற்றி!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான நேற்றைய (12) போட்டியில் இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இஷான் கிஷன் 61 […]

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்திச் செயற்படுத்தப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது. வரி நீங்கலாக சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், 6.03 கிலோ மீற்றர் நீளத்துக்கு இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. துரித […]

தேர்தலில் பலப்பரீட்சை நடத்த சு.க. தயார்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போதே தயாராகி வருகின்றது என்று அக்கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நிலையில் அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். முதலில் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்துவதே தமது முதன்மை இலக்கு எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்து […]

மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன்?

இலங்கையின் வயது வந்தோரில் மூன்றில் ஒரு பகுதியினர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வயம்ப பல்கலைக்கழகம் இணைந்து 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆண்களை விட பெண்களிடையே உடல் பருமன் வீதம் சுமார் 10% அதிகமாகக் காணப்படுகிறது. சிறுவர்களிடையே இந்த பாதிப்பு குறைவாக இருந்தாலும், சுமார் 12 சதவீத […]

சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு கடற்றொழிலாளர்களால் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி […]

பல ஏக்கர் அரச காணி வெற்றிலைக்கேணியில் அத்துமீறி சுவீகரிப்பு

யாழ்ப்பாணம்- வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் அரச காணி அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் கணக்கான அரச காணி தனி நபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. குறித்த அரச காணியில் வெற்றிலைக்கேணி பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலையில் […]

அநுரவுக்கு அடிபணியமாட்டோம் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது – கஸ்ஸப தேரர்

இந்தியாவின் பலாத்காரங்கள் ஜனாதிபதி அநுர ஊடாக வந்தாலும் நாம் பயம் கொள்ளப் போவதில்லை. பயங்கர யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவ வீரர்களின் பிராண வாயுவை சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் நேற்று (12.02.2026) ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே இதனை அறிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றி அவர், ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலர்.அவருக்கு தெரிய வேண்டும், இந்த சிங்கள பௌத்த […]