பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்கு ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் நாளை (14) சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களத்தின் […]
ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை: 27வது கூட்டு ஆணையக் கூட்டம்

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் இலங்கை ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தின் 27வது அமர்வை கொழும்பில் 2026, பெப்ரவரி 12, அன்று, கூட்டின. நட்பு மற்றும் திறந்ததொரு மனப்பாங்கின் அடிப்படையில் நடைபெற்ற இக்கூட்டம், இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்து, ஆளுகை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முதல் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி,மீன்வளம், கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, மீளனுமதி மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வரையிலான […]
‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொலை!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இன்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர். அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் […]
பலத்த எதிர்பார்ப்புகளோடு இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

ந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பார்வையிட செல்லும் ரசிகர்கள் சில பொருட்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், போட்டி இடம்பெறும் போது பாதுகாப்பு கடமைகளுக்காக 2,000 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், 600 போக்குவரத்து பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுவதுடன், உடல் மற்றும் வாகனப் […]
ருமேனியாவில் விபத்தில் இலங்கை இளைஞன் பலி

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் உள்ள செக்டர் 3 பகுதியில், ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் எதிர்பாராத விதமாக வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இலங்கையர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மகேஷ் தனஞ்சய ஹெட்டிகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் ருமேனியா சென்ற நிலையில் அங்கு அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. சம்பவத்தன்று, […]
பொறுமையுடன் இருந்தால் ஒரு நாள் உண்மை வெற்றி பெறும் – சஜித்

ல்லிணக்கப் பொறிமுறையை வலுப்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் அனைத்து இனம், மதம், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை (13) கொழும்பு நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்த போதே இதனை வலியுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்கள் வழியாக எவ்வளவு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பயணம் சரியானதாக இருந்தால், பொறுமையுடன் இருந்தால், அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு நாள் உண்மை […]
தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்கிறது – நாமல் ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும், இத்தகைய சவால்களுக்குத் தமது கட்சி ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற நிழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில், தற்போது தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள […]
அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

லங்கம – அக்குரேகொட பகுதியில் இன்று (13) நடந்த துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வாகன தரிப்பிடப் பகுதிக்கு அருகிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதலில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடித்தலை தடை செய்யுமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடை செய்யுமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் இன்று (13) போராட்டம் நடத்தினர். முல்லைத்தீவு கடற்கரையில் ஆரம்பமான பேரணியில் “சட்டவிரோத தொழில் அதிகரிப்பு”, “சிறுதொழில் மீனவர்களின் வாழ்வு பாதிப்பு”, “சட்டவிரோத தொழிலை தடைசெய்”, “சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அனுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே” என பல கோஷங்களுடன் போராட்டக்காரர்கள் நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு சென்று தமது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் கையளித்தனர். […]
ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசராத்திரிக்கு வழிபட இடமளிக்க வேண்டும்!

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி […]