மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மரணத்தில் மர்மம்?

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது அவரின் தனிவிமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த அவரது பாதுகாவலர், 2 விமானிகள், விமான பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது. நடப்பு […]

ரஷ்யா மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் கடும் குளிரை எதிர்கொண்டு வரும் நிலையில், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் முக்கிய நகரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த இடைவேளையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கீவ் நகரில் பல பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. அமெரிக்க […]

தமிழ்நாட்டில் தேர்தல் பொறுப்பில் இருந்து திடீரென விலகிய அண்ணாமலை!

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் அமைக்கப்பட்டு இருந்த தேர்தல் பொறுப்பாளர்களில் அண்ணாமலையும் ஒருவர். 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலையை பா.ஜ.க. தலைமை நியமித்து இருந்தது. இந்த நிலையில், கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நயினாரிடம் தனது விலகல் குறித்து கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும், நேரமும் […]

மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தெரியும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

எதிர்க்கட்சிகள் கூறுவது போல, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்கள் என்பதும், அவர்களுக்கு அனுபவம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், அவர்கள் குறிப்பிடும் கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது மற்றும் குடும்ப அரசியலை முன்னெடுப்பது போன்ற அனுபவங்கள் எங்களிடம் இல்லை. ஆயினும், மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும், எந்த முறையில் சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து, பாராளுமன்றத்திற்குப் புதியவர்களாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசியல் வாழ்க்கையில் பல வருட அனுபவங்களைக் […]

வாடகைக்கு வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க புதிய சட்டமூலம்

வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (03) விளக்கமளித்தார். இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது […]

ஊர்காவல்துறையைச் சேர்ந்த கடற்றொழிலாளியைக் காணவில்லை

ழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறை கடற்றொழிலாளர்களின் விசைப்படகில் இருந்து காரநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளி ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன கடற்றொழிலாளி ஊர்காவல்துறை பருத்தி அடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இவர்கள் மீன்பிடிக்க சென்ற பொழுது பின் அணியத்திலிருந்து கடற்றொழிலாளி கடலில் தவறி விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போன கடற்றொழிலாளியை தேடும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கோண்டாவில் சிறுவன் வயிற்றோட்டததால் உயிரிழப்பு!

யாழில் கிருமித் தொற்றினால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் – இருபாலை வீதியைச் சேர்ந்த மகிந்தன் லர்மிகன் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு நேற்று வயிற்றோட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 5.00 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். வயிற்றோட்டம் ஏற்பட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்து கிருமித்தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அவரது […]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வருகை தரும் தமிழக மீனவர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (03) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது […]

ஜனாதிபதியின் 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார […]

இராணுவ சிப்பாய்கள் 9158 பேருக்குகு தரநிலை உயர்வு

இன்று (4) கொண்டாடப்படுகின்ற 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சிப்பாய்கள் பிரிவில், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I ஆம் நிலைக்கு 260 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II ஆம் நிலைக்கு 1211 பணிநிலை சார்ஜென்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் பணிநிலை சார்ஜென் நிலைக்கு 1704 சார்ஜென்களும், 2339 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 2204 லான்ஸ் கோப்ரல்கள் […]